எதிர்வரும் 15 மாதங்களில் ஐந்து தேர்தல்களை நடாத்த அரசாங்கம்
உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த மாதம் ஜனவரி மாதம் முதல்
2015ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஐந்து முக்கிய
தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இரண்டு மாகாணசபைத் தேர்தல்களும், இரண்டு உள்ளுராட்சி மன்றத்
தேர்தல்களும் நடாத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கு மேலதிகமாக
ஒரு உள்ளுராட்சி மன்றத் தேர்தலும் நடத்தப்பட உள்ளது.
ஜனவரி மாத முதல் வாரத்தில் மேல் மற்றும் தென் மாகாணசபைகள் கலைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிhவரும் மார்ச் மாத நடுப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிhவரும் மார்ச் மாத நடுப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா
ஆகிய மாநகரசபைகளுக்கான தேர்தல்களும் அடுத்த ஆண்டு நடத்தப்படக் கூடுமென
எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் நடத்தப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல்களை நடாத்துவது குறித்த சாத்தியப்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் முக்கிய அமைச்சர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தேர்தல்களை நடாத்துவது குறித்த சாத்தியப்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் முக்கிய அமைச்சர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

0 comments:
Post a Comment