எஸ்.றிபான் -
கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்துள்ளது. முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவம் குறைவடைந்துள்ளமைக்கு முஸ்லிம் கட்சிகளும், அரசியற் தலைமைகளும் ஆளை ஆள் குற்றஞ் சாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்துள்ளமைக்கு தனியே ஒரு கட்சியின் மீதோ அல்லது ஒரு அரசியற் தலைமையின் மீதோ குற்றஞ் சாட்ட முடியாது. முஸ்லிம்களின் அரசியற் பலவீனப்பட்டுக் கொண்டு போவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளும், கட்சிகளும் மட்டுமன்றி முஸ்லிம் வாக்காளர்களும் காரணமாகும். அத்தோடு, முஸ்லிம் புத்திஜீவிகளும் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்துள்ளது. முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவம் குறைவடைந்துள்ளமைக்கு முஸ்லிம் கட்சிகளும், அரசியற் தலைமைகளும் ஆளை ஆள் குற்றஞ் சாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்துள்ளமைக்கு தனியே ஒரு கட்சியின் மீதோ அல்லது ஒரு அரசியற் தலைமையின் மீதோ குற்றஞ் சாட்ட முடியாது. முஸ்லிம்களின் அரசியற் பலவீனப்பட்டுக் கொண்டு போவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளும், கட்சிகளும் மட்டுமன்றி முஸ்லிம் வாக்காளர்களும் காரணமாகும். அத்தோடு, முஸ்லிம் புத்திஜீவிகளும் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் காணப்படும் இனத்துவ அரசியலில் முஸ்லிம்களும் தங்களின் அரசியல் பலத்தினை முன் வைத்து தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டுதான் மர்ஹூம் எம்.எச்எம்.அஸ்ரப் முஸ்லிம்களின் அரசியல் பலத்தினை ஒரு தனித்துவமான கட்சியினூடாகத்தான் நிலைநாட்ட முடியுமென்று கருதினார். இதன் காரணத்தால்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தார். அவர் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளை ஒரு முகப்படுத்தி முஸ்லிம்களின் அரசியல் பலத்தை கட்டியெழுப்பினார். அந்த அரசியல் பலத்தைக் கொண்டு இந்த நாட்டின் ஆளுந் தரப்பை தீர்மானிக்கின்ற சக்தியாக முஸ்லிம்களை அடையாளப்படுத்தினார்.
ஆனால், இன்று, அந்த அரசியல் பலம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்று கருதப்படுகின்றவர்களினால், அவர்களின் பச்சைச் சுயநலத்திற்காக சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம்களின் அரசியலை கைகளில் எடுத்துக் கொண்டவர்கள் அமைச்சர்களாக வலம் வர வேண்டுமென்ற பதவி மோகத்தின் விளைவாக ஆளுக்கொரு கட்சியை அமைத்துக் கொண்டு தலைவர் என்று பெயரில் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தங்களுக்கென்று ஒரு கட்சி இருந்தால்தான் அமைச்சர் பதவியை பேரினவாதிகளிடம் பெற்றுக் கொள்ளலாமென்று கணிப்பீடு செய்து முஸ்லிம்களின் அரசியல் பலத்தை நாரடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி பல கூறுகளாகப் பிரிந்து நிற்பதற்கு பதவி ஆசை மட்டுமன்றி, முஸ்லிம் காங்கிரஸை வழி நடத்தும் நிர்வாகிகள் முஸ்லிம்களின் எதிர் காலத்தை கருத்திற் கொள்ளாது செயற்பட்டமையையும் முஸ்லிம்களின் அரசியல் சின்னா பின்னமாவதற்கு காரணமாகும். கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி ஏற்பட்ட போது, அதனை பொறுமை, ராஜதந்திரம், விட்டுக் கொடுப்பு போன்வற்றை மேற்கொள்ளாது, யாரை கட்சியிலிருந்து நீக்கினால் அல்லது யார் கட்சியை விட்டு விலகிப் போனால் தங்களின் அரசியல் இலாபகரமாக அமையும் என்று கருதி அதற்கான வேலைகளைச் செய்து காய்களை நகர்த்தினார்கள் இன்று முஸ்லிம் காங்கிரஸை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள்.
இவ்வாறு முஸ்லிம்களின் அரசியல் பலத்தை குரங்கு அப்பத்தை பங்கு போட்ட கதையாக எல்லோரும் பங்கு போட்டு விட்டு, மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதித்துவம் குறைவடைந்தமைக்கு நான் காரணமல்ல, எனது கட்சி காரணமல்ல, மற்றவர்களும், மற்றக் கட்சிகளும்தான் காரணமென்று கூறிக் கொண்டு தங்களின் துரோகத்தை மறைப்பதற்கு கோவணத்தை தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
நாட்டடில் முஸ்லிம்களின் மீது பௌத்த கடும்போக்காளர்கள் மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் அரசியல் தலைமைகள் காத்திரமாகச் செயற்படவில்லை. பௌத்த பேரினவாதிகளின் செயற்பாடுகளுக்கு பி;;ன்னால் அதிகார தரப்பின் கரம் இருக்கின்றதெனக் கருதி அடங்கி இருந்தார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றவைகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று; அடர்ந்து ஏறுவதற்கும், குரல் கொடுப்பதற்கும் முடியாதவர்களாக நகங்களை கடித்துக் கொண்டிருந்ததனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை மாகாண சபைகளின் தேர்தல்களின் மூலமாக முஸ்லிம்கள் காட்டியுள்ளார்கள்.
தனித்துமான கட்சி, முஸ்லிம்களின் குரல், முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுக் கொண்ட கட்சி என்றெல்லாம் நல்ல பெயரை சூட்டடிக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸையும், அதன் தலைமையையும், மக்கள் பிரதிநிதிகளையும் எடுத்துக் கொண்டால், அவர்கள் சூடு பறக்க அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தார்களே அன்றி, தீர்வுகளை பெற்றுக் கொள்ள சக்தியற்றவர்களாகவே தங்களை காட்டிக் கொண்டார்கள்.
அரசாங்கத்தில் கூடுதல் மக்கள் பிரதிகளுடன் இருக்கின்ற சிறபான்மைக் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்ற போதிலும், அரசாங்கத்தில் செல்வாக்கு குறைந்ததொரு கட்சியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது. இக்கட்சியினால் முஸ்லிம்களுக்கு அபிவிருத்திகளைச் செய்யவும் முடியவில்லை. முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு துணிந்து குரல் கொடுக்கவும் முடியவில்லை. அரசாங்கத்தின் எச்சங்களுக்கு வாய் வழியும் கட்சியாகவே இப்போதைக்கு முஸ்லிம் காங்கிரஸ் இருந்து கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸில் இப்போதைக்குள்ளவர்களின் சுயநலங்கள் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகினற நடவடிக்கைகளை தடுப்பதற்கும், அதற்கு எதிராக தன்மானத்துடன் தலை நிமிர்ந்து பேசுவதற்கும் பெரும் தடைக் கல்லாக இருந்து கொண்டிருக்கின்றன. இக்கட்சியின் சொல்லுக்கும், செயலுக்குமிடையே பாரிய இடைவெளி காணப்படுவதனால் மக்கள் இக்கட்சியின் மீது நம்பிக்கையை இழந்து கொண்டு வருவதுதான் ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் கண்டு வருகின்ற வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று தனிக் கட்சி அமைத்தவர்களின் நிலையும் சொல்லும் படியாக இல்லை. அவர்கள் அரசாங்கத்தின் சிறு துரும்பிலாவது தொங்கிக் கொண்டிருக்க வேண்டுமென இருக்கினறார்கள். இவர்களின் செல்வாக்கு அரசாங்கத்தேர்டு இணைந்து இருக்கும் வரைக்கும்தான் இருக்கும் என்பதில் அவர்களுக்கு அதிக நம்பிக்கையாகும். இதன் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸைப் போல் முசுபாத்திக்கு கூட வாய் திறப்பதற்கு சக்தியற்றவர்களாகவே இருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக பேசி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்த அதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பேசி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி பெறவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் மூன்று மாகாண சபைத் தேர்தலிலும் 04 ஆசனங்களைப் பெற்று தனது செல்லவாக்கில் உள்ள வீழ்ச்சியை காட்டியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸை எடுத்துக் கொண்டால் இக்கட்சி வடக்கு மாகாணத்தில் 03 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதாக பெருமை கூறிக் கொண்டிருக்கின்றது. வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸை விடவும் 02 ஆசனங்களை கூடுதலாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தக் கொண்டிருக்கின்றது. இக்கட்சி பெற்ற மூன்று பேரில் ஒருவர் சிங்களவர் என்பது கறிப்பிடத்தக்கது. இக்கட்சியினர் முஸ்லிம்களிடமிருந்து வெற்றிலைச் சின்னத்திற்கு பெற்றுக் கொடுத்த வாக்குகள் சிங்கள வேட்பாளர்களின் வெற்றிக்கு வழி சமைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் மீது பௌத்த கடும்போக்காளர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட:டு முஸ்லிம்களில் பலருக்கு இருக்கின்ற நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்தின் சாதனைகளை பேசிக் கொண்டிருந்தனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இக்கட்சி அரசாங்கத்துடன் இருக்கும் உறவு உடைந்து விடக்கூடாதென்பதில் காட்டிய அக்கரையை முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தின் மீது காட்டவில்லை. முஸ்லிம்களின் வாக்குகளை வெறும் அபிவிருத்திக்கு அடகு வைக்கும் தோரணையில்தான் இக்கட்சியின் செயற்பாடுகள் அமைந்து இருந்நதன. முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதனை விடவும், அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து விடக் கூடாதென்பதில் அக்கரை காட்டிக் கொண்டு, எந்த காட்டிக் கொடுப்புக்கும் தயாராதொரு கட்சியாக இது இருந்து கொண்டிக்கின்றது.
இவை போன்ற காரணிகளினால் இக்கட்சியின் மீதும் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள்.
இதே வேளை, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் பேரினவாதக் கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களில் அஸாத்சாலியை தவிர்த்து மற்ற அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்துள்ளாhகள். இனத்துவ போக்கைக் கொண்ட இலங்கை அரசியலில் பேரினவாதக் கட்சிகளில் போட்டியிட்டு முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள முடியாதென்பது நிருபனமாகியுள்ளன.
முஸ்லிம்கள் பேரினவாதக் கட்சிகளுக்கு வாக்களித்மைக்கான காரணம் முஸ்லிம் கட்சிகளின் மீது நம்பிக்கையில்லாமையாகும். முஸ்லிம் கட்சிகளில் அதிக பிரதிநிதித்துவம் கிடைத்தாலும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க மாட்டார்கள் என்ற முடிவில் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு அச்சமின்றி குரல் கொடுத்தால் எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்பதற்கு அஸாத்சாலியின் வெற்றி நல்ல எடுத்துக் காட்டாகும்.
முஸ்லிம் கட்சிகளினதும், முஸ்லிம் தலைமைகளினதும் பொறுப்பற்ற நடத்தைகள் காரணமாக முஸ்லிம்கள் பேரினவாத கட்சிகளின் பின்னால் அணிதிரள்வதற்கு தயாராகியுள்ளார்கள் என்பதும் இத்தேர்தலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள்தான் மக்களின் பிரதிநிதியாக இருக்க தகுதியுடையவர்கள். ஆதலால், முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பதற்கு அஸாத்சாலி போன்றவர்கள் முன் வருதல் வேண்டும். அஸாத்சாலி ஆளுந் தரப்பில் இருந்தால் என்ன செய்வார் என்பதும் சிந்திக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் பிரிந்து நிற்பதனால்தான் முஸ்லிம்களின் அரசியல் பலம் வீழ்ச்சியடைந்துள்ளது. இயக்க ரீதியாகவும், கட்சி ரீதியாகவும்; முட்டி மோதிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தமிழ் இனத்தின் ஒற்றுமையை உலகிற்கு காட்ட வேண்டுமென்று ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதனைப் போன்று முஸ்லிம் கட்சிகளும் தங்களை வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காண வேண்டும். வட மகாணத்தில் தமிழர்கள் பெற்ற வெற்றியை போன்று முஸ்லிம்களும் தங்களின் ஒற்றுமையைக் காட்டக் கூடிய சந்தப்பம் கிழக்கு மாகாண சபை தேர்தல்கள் இரண்டிலும் வாய்ப்புக்கள் ஏற்பட்ட போதும் முஸ்லிம் கட்சிகளும் தலைமைகளும் அதனை தங்களின் சுயநலத்திற்கு இரையாக்கியுள்ளன.
முஸ்லிம் கட்சிகளின் இத்தகைய சுயநலப் போக்கை கட்டுப்படுத்தி ஒற்றுமைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை புத்திஜீவிகள் எடுக்காது போனால் முஸ்லிம்களின் அரசியல் பலம் இன்னும் படுமோசமான நிலைக்கு தள்ளப்படும்.
விடிவெள்ளி-

0 comments:
Post a Comment