• Latest News

    October 07, 2013

    புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை

    உலர் திராட்சை
    திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து  எடுப்பதால் உலர் திராட்சை பழம் என்கிறோம். உலர் திராட்சையில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் சுக்ரோஸ்,  பரக்டோஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம் இரும்புச்சத்து பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துகளும் இதில்  உள்ளது.
    வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும். இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதிபெறவும் பற்கள் வலுபெறவும்  உடல் வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது. குழந்தைகளுக்கு தேகபுஷ்டி வேண்டுமென்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் போட்டு  காய்ச்சி அருந்தச்செய்யுங்கள். இவ்வாறு பருகுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

    மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடும் முதியோர்களுக்கு சிறந்தது. உல் திராட்சை தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள  சிவப்பணுக்கிளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த பலத்தை வாயில் போட்டு சாப்பிடும் போது எலும்பு மஞ்ஜைகள் வலுபெறும். மஞ்சள் காமாலை  நோய் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

    தொண்டை கட்டு ஏற்பட்டவர்கள் பால் காய்ச்சும் போது மிளகுதூள், உல் திராட்சையை போட்டு பருகலாம். நாவறட்சிக்கு சிறந்தது உலர் திராட்சை.  உலர் திராட்சையுடன் மிளகு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நாவறட்சி எளிதில் குணமாகும். உடல் வலியால் அவதிபடுபவர்கள் சுக்கு,  பெருஞ்சீரகம், உலர்திராட்சையை யும் சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி பருகினால் உடல் வலி தீரும்.

    பித்தத்திற்கும் இது சிறந்த மருந்து. கர்ப்பிணிபெண்களும் பாலில் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.  இந்தப்பழத்தை பாலில் போட்டும் வெறுமனையாக சாப்பிட்டும் வந்தால் இதய துடிப்பு சீராக செயல்படும். தினமும் ஒரு பத்து உலர் திராட்சை பழத்தை  தொடர்ந்து ஒரு மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top