• Latest News

    October 11, 2013

    கல்முனை மேயரின் கவனத்திற்கு !

    இப்னு செய்யத்
    கல்முனைக்குடி சாஹிபு வீதி கடற் கரை பிரதேசத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் வரையான பகுதி பொது மக்கள் பயணம் செய்ய முடியாத வகையில் மிகவும் மோசமாகக் காணப்படுகின்றன. இவ்வீதியையும், இவ்வீதிக்கான வடிகான் அமைப்பையும் இற்றைக்கு 14 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த போதிலும், இன்னும் முடிவடையவில்லை.
    இவ்வீதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், பாடசாலை மாணவர்களும் போக்குவரத்தை மேற்கொள்வதில் அசௌகரியங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
    ஆதலால், கல்முனை சாஹிபு வீதியை உடனடியாக புனரமைக்கும் நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபையும், மேயரும் எடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மேயரின் கவனத்திற்கு ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top