இப்னு செய்யத் -
வலயக் கல்விப் பணிப்பாளர்களினூடாக அவர்களின் விதந்துரைப்புடன் எமக்கு கோரிக்கை முன் வைக்கப்படுமாயின் க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சையை நவராத்திரி பூசைக்கு பின்னான திகதிக்கு மாற்றுதல் தொடர்பில் பரிசீலிக்க முடியுமென்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம்; க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சையை நவராத்திரி பூசைக்கு பின்னான திகதிக்கு மாற்றுமாறு இந்து அமைப்புக்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சையை நவராத்திரி பூசைக்கு பின்னான திகதிக்கு மாற்றுமாறு மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம், மட்டக்களப்பு – அம்பாரை மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் ஆகிய மாகாண கல்விப் பணிப்பாளருக்கு விடுத்த கோரிக்கைக்கு பதில் அளிக்கும் முகமாக அந்த அமைப்புக்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தத்திலேயே மேற்படி கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.வலயக் கல்விப் பணிப்பாளர்களினூடாக அவர்களின் விதந்துரைப்புடன் எமக்கு கோரிக்கை முன் வைக்கப்படுமாயின் க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சையை நவராத்திரி பூசைக்கு பின்னான திகதிக்கு மாற்றுதல் தொடர்பில் பரிசீலிக்க முடியுமென்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம்; க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சையை நவராத்திரி பூசைக்கு பின்னான திகதிக்கு மாற்றுமாறு இந்து அமைப்புக்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சை தொடர்பாக மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே உரிய வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டு, முன்னோடிப் பரீட்சைக்கான இறுதிக் கட்ட வேலைகளும் முடிவடைந்துள்ளன.
இது பற்றி வலயக் கல்வி அலுவலகங்களோ அல்லது பாடசாலைகளோ எதுவிதக் கோரிக்கைகளையும் விடுக்கவில்லை. அத்துடன் மேற்படி 09 நாட்களும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு நவராத்திரி விழா செய்வதாகவும் எமக்கு அறிவிக்கவில்லை.
எவ்வாறாயினும், தங்கள் கோரிக்கையினை சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களினூடாக, அவர்களின் விதந்துரையுடன் எமக்கு அனுப்பி வைப்பின், இதுபற்றி பரிசீலிக்கக் கூடியதாக இருக்கும் என்பதை தயவுடன் அறியத் தருகின்றேன்.
மேலும், இப்பரீட்சை மூலம் பின்தங்கிய மாணவர்கள் இனங் காணப்பட்டு, அவர்களுக்கான விசேட வகுப்புக்கள் ஒழுங்கு செய்து எதிர்வரும் க.பொ.த (சா.த) பரீட்சையில் அவர்களைச் சித்தியடையச் செய்வதே இம்முன்னோடிப் பரீட்சையின் நோக்கமாகும். விசேட வகுப்புக்கள் வைப்பதற்கு குறைந்தது ஒன்றரை மாத காலமாவது தேவைப்படும் என்பதனாலேயே இப்பரீட்சை 2013.10.07 திகதி முதல் 2013.10.11ஆம் திகதி வரை நடாத்த தீர்மானித்தோம். சரஸ்வதி பூசை நடைபெறும் இறுதித் தினமான 2013.10.15ஆம் திகதிக்கு பின் வரும் 2013.10.17ஆம் திகதி மட்டுமே பாடசாலை நாளாகும்.
2013.10.21ஆம் திகதிக்கு முதல் நாடளாவிய ரீதியில் தரம் 11 மாணவர்களுக்கு மாதிரி பரீட்சை வினாத்தாள் தொடர்பான செயலமர்வினை மத்திய கல்வி அமைச்சு நடாத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கு இடையே பொய்களை சொல்லி சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடாது
இதே வேளை, இணைய தளமொன்று நவராத்திரி விழா காலத்தில் முன்னோடிப் பரீட்சையை நடாத்த திட்டமிட்டுள்ள கிழக்கு மாகாண கல்விப் பபணிப்பாளர் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில் அண்மையில் தொழில் பயிற்சி பாடநெறி பாடசாலைகளில் ஒரே ஒரு தமிழ் பாடசாலையும், மூன்று சிங்கள பாடசாலையும், எட்டு முஸ்லிம் பாடசாலையும் கிழக்கு மாகாணத்தில் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவு செய்துள்ளதாகவும், அவர் இன ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது வேண்டுமென்று உண்மையினை ஆராய்ந்து பாராது, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக ஒரு முஸ்லிம் இருப்பதனை ஏற்றுக் கொள்ளாத தன்மையிலான இன ரீதியான சிந்தனையாகும். தொழில்நுட்பப் பாடங்களுக்கான பாடசாலைகளை மத்திய கல்வி அமைச்சே முதலில் தெரிவு செய்து இருந்தது. ஆயினும், இதில் ஒரு சமநிலைத் தன்மையில்லை என்று முதலில் கருதியவர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராவார். அவர் வலயக் கல்விப் பணிப்பாளர்களை ஒன்று கூட்டி, பாடசாலைத் தெரிவில் ஒரு சமநிலையைப் பேணி, தமிழ் பாடசாலைகளை உள்வாங்கினார்.
இவ்வாறு உண்மை இருக்கின்ற நிலையில், மாகாண கல்விப் பணிப்பாளர் இனரீதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்று உண்மைக்கு மாற்றமாக தகவல்களை மக்களுக்கு வழங்கி மீண்டும் இனவிரோத பிரிவனையை ஏற்படுத்துவதற்கு முனைவதுதான் இனரீதியான செயற்பாடாகும். இவ்வாறான உண்மைக்கு மாற்றமான செய்திகளையிட்டு மக்கள் குழப்பமடைந்து விடாது உண்மையை ஆராய்ந்து செயற்பட வேண்டும்.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதனை புள்ளிவிபரங்களாக வெளியிட முடியும். கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரம் முஸ்லிம்களிடம் இருப்பதாகவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எல்லோரும் முஸ்லிம்களாக இருப்பதாகவும் அச்செய்தியில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தின் அதிகாரம் முஸ்லிம்களுக்கு கிடைத்தமை அவர்கள் அளித்த வாக்குகளின் மூலமாகவும் என்பதனை புரிந்து கொள்ளல் வேண்டும். யாரும் முஸ்லிம்களுக்கு அதிகாரங்களை தாரைவார்த்துக் கொடுக்கவில்லை. ஆனால், கிழக்கு மாகாண சபைக்கு 2009இல் நடந்த முதலாவது தேர்தலில் தமிழர்களுக்கு முஸ்லிம்கள் அதிகாரங்களை தாரைவார்த்துக் கொடுத்தார்கள் என்ற உண்மையை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த மாகாண சபையில் ஆளுந் தரப்பில் முஸ்லிம் உறுப்பினர்களை விடவும் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது என்பதனை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
தற்போதைய கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஒன்றினை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி முன்னாள் முதலமைச்சர் சந்திரக்காந்தனை கேட்டுக் கொண்ட போது அவர் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். அவர் மறுத்ததிற்கும் முஸ்லிம்கள்தான் காரணமா என்று கேட்கின்றோம்.
தமிழ் பேசும் மக்கள் என்று மொழியால் ஒற்றுமைப்பட வேண்டிய தருணத்தில் இருந்து கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் தமிழர், முஸ்லிம் என்று பிரித்து நோக்குவது நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு உண்மையான கருத்துக்களைச் சொல்லப்பட வேண்டும்.

0 comments:
Post a Comment