சாய்ந்தமருது பொலிவேரியன் பிரதேசத்தின் பின்புறத்தில் வெளிச்சம் கூடிய போகஸ் லைட்களை நாளை மறுதினம் பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன்று (26.10.2013) பணிப்புரை விடுத்தார்.
குறித்த பிரதேசத்தின் பின்புற வயல் வெளி வழியாக அண்மைக்காலமாக இரவு நேரங்களில் யானைகள் வருவதனாலும் அப்பிரதேசம் இருள் சூழ்ந்து காணப்படுவதனாலும் பிரதேச மக்கள் பீதியுடன் வசிப்பதாக முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதனை தொடர்ந்து அபப்பிரதேசத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டபோதே மேற்குறித்த பணிப்புரையை விடுத்தார்.
மாநகர சபை தேர்தலின்போது பெண்களாகிய நாங்கள் மிகவும் ஆர்வத்துடனும் சுறுசுறுப்பாகவும் உங்களை மேயராக ஆக்கவேண்டும் என்ற கனவுடன் வாக்களித்தோம். அந்த கனவு நனவாகியுள்ளவேளையில் கானலாக மறைவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. அதுமாத்திரமல்லாது எங்களுக்கு நீங்கள் மேயரானதும் பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி வருகின்றீர்கள்இ உங்களை இளக்க நாங்கள் தயார் இல்லை. நாங்கள் அழகு பார்த்த முதல்வர் பதவியை நீங்கள் துறக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டனர்.
0 comments:
Post a Comment