இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு, அக்பர் பக்தி கொலை வழக்கு, நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து தண்டித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முஷரப், அவரது வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்குகள் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகின்றன. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெனாசீர்
பூட்டோ கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 25-ம் தேதி இறுதி
குற்றப்பத்திரிகையை மத்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்தது. அதில்
முஷரப் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில் இருந்து தனது பெயரை விடுவிக்க வேண்டும் என்று கோரி முஷரப், தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது முஷரப்பின் பெயரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், சாட்சியாக சேர்க்க வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அந்த கோரிக்கையை கோர்ட் நிராகரித்துவிட்டது. அத்துடன் இவ்வழக்கின் புதிய விசாரணையை அக்டோபர் 22-ம் தேதி தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு முஷரப்பிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:
Post a Comment