• Latest News

    October 08, 2013

    உலக சனத்தொகை வளர்ச்சியின் 70 வீதத்தை முஸ்லிம் நாடுகள் ஆக்கிரமிக்கும்!

    அ. நவாஸ்
    எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கான உலக சனத்தொகை வளர்ச்சியின் 70 வீதத்தினை முஸ்லிம் நாடுகள் தம் வசப்படுத்திக்கொள்ளும் என பிரபல தொம்சன் ரொய்ட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    உலகின் ஏனைய முஸ்லிம் அல்லாத நாடுகளோடு ஒப்பிடும் போது முஸ்லிம் நாடுகளின் சனத்தொகை வளர்ச்சி இரட்டிப்பாக இருப்பதாகவும் இதன் மூலம் இஸ்லாமிய அடிப்படையிலான வங்கிகள் மற்றும் அவற்றின் பெறுமதிகளும் உலக அளவில் எகிறிச்செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உலக முஸ்லிம் சனத்தொகை தற்போது 1.6 பில்லியனாக இருக்கும் அதே வேளை இஸ்லாமிய வங்கிகளின் சொத்துக்கள் இவ்வாண்டில் 1.3 ட்ரில்லியன் அமெரிக்கன் டொலர்களாகவும் எதிர்வரும் ஆண்டு இது 2 ட்ரில்லியனைத் தொட்டு விடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

    வருடாந்தம் 19 வீத வளர்ச்சியைக் இத்துறை கண்டுவருவதோடு உலக இஸ்லாமிய நாடுகளின் உணவு இறக்குமதியின் பெறுமதி வருடாந்தம் 126 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருப்பதனால் ஹலால் உணவுத்துறை வேகமான வளர்ச்சியையும் கண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போன்று ஹஜ்இ உம்ரா தவிர்ந்த ஏனைய சுற்றுலாத்துறையிலும் உலக முஸ்லிம்களின் பங்கு வருடாந்தம் 126 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக இருப்பதாகவும் 2020ம் ஆண்டு வரை வருடாந்தம் 4.8 விகித வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ்வாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக முஸ்லிம் நாடுகளின் பங்குஇ பொருளாதார வளர்ச்சி மற்றும் புள்ளிவிபரங்களை நன்கறிந்து வைத்திருக்கும் மேற்கு நாடுகள் அவ்வப்போது முஸ்லிம் நாடுகளை சூறையாட எடுக்கும் முயற்சிகளையும் இது போன்ற தகவல்களின் அடிப்படையில் வைத்து மிக இலகுவாக உணர்ந்து கொள்ளலாம்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலக சனத்தொகை வளர்ச்சியின் 70 வீதத்தை முஸ்லிம் நாடுகள் ஆக்கிரமிக்கும்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top