மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள இந்து மயான காணிகளை காத்தான்குடியை சேர்ந்த
சிலர் அத்துமீறி பிடித்துள்ளதாகவும் அதை மீட்டுத்தருமாறு கோரியே இந்த
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையிலேயே இந்த
ஆட்டப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
ஆரையம்பதி பிரதேச மக்கள் மாவட்ட செயலகத்தின் பிரதான கதவுகளை மூடினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்தோர் தமது பொது மயான காணியை அத்துமீறி
காத்தான்குடியை சேர்ந்த சிலரினால் பிடிக்கப்படுவதாகவும் இதனால் தமக்கு
சடலங்களை அடக்கம் செய்ய இடமில்லாது இருப்பதாகவும் கோசங்களை எழுப்பியதுடன்
சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.
இதையடுத்து அங்கு வருகை தந்த பொலிஸார் மூடப்படடிருந்த மாவட்ட செயலக
கதவுகளை உடைத்து அரசியல் பிரமுகர்களையும் அதிகாரிகளையும் அழைத்துச்
சென்றனர்
இது விடயமாக கவனமெடுப்பதாக அங்கு வந்த அரசியல்வாதிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட செயலகத்திற்கு வெளியில் சென்றன
0 comments:
Post a Comment