• Latest News

    October 08, 2013

    மருத்துவ துறையில் நோபல் அறிவிப்பு ; 2 அமெரிக்கர் - ஜெர்மானியர் தேர்வு

    2013 ம் ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஸ்வீடனில் நடந்த நிகழ்ச்சியில் தேர்வுக்குழுவை சேர்ந்த தலைவர் கோரன் ஹான்சன் மருத்து துறையில் சிறந்த சேவையாற்றிய 3 பேருக்கான விருதை அறிவித்தார்.
    இதன்படி , அமெரிக்கர்களான ஜேம்ஸ் ரோத்மன், ராண்டி டபுள்யூ ஸ்கேமேன், அமெரிக்கா வாழ் ஜெர்மானியரான தாமஸ் சி. சுடாப் ஆகிய 3 பேர்
    தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மனித செல் அணுக்கள் உடலில் இடம்பெயர்வது குறித்து ஆய்வு செய்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    இவர்களுக்கான பரிசு வரும் டிசம்பர் மாதம் வழங்கி கவுரவிக்கப்படும். ரூ.7 கோடியே 70 லட்சம் பரிசுத்தொகை ஆகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருத்துவ துறையில் நோபல் அறிவிப்பு ; 2 அமெரிக்கர் - ஜெர்மானியர் தேர்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top