• Latest News

    October 04, 2013

    சர்வதேச தரபுகைப்படத்துடன் இனி இலங்கை கடவுச்சீட்டு!

    2014 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படத் தன்மையுடன் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

    அதன்படி அடுத்த வருடம் முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் அங்கீகாரம் பெற்ற நிலையங்களில் மாத்திரமே கடவுச்சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் புதிய புகைப்பட நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஒக்டோபர் 15ம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களைப் பெற முடியும் எனவும் இது குறித்து 0115 731028 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள முடியுமென இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சர்வதேச தரபுகைப்படத்துடன் இனி இலங்கை கடவுச்சீட்டு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top