• Latest News

    October 05, 2013

    இடமாற்றம் செய்யப்பட்ட டி.ஐ.ஜி மீண்டும் கிழக்கில்

    இடமாற்றம் வழங்கப்பட்ட கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மீண்டும் கிழக்குக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
    இன்று சனிக்கிழமை காலை அவர் தனது மட்டக்களப்பிலுள்ள பழைய அலுவலகத்தில் கடமைப் பொறுப்பை ஏற்றார்.
    பொலிஸாரை முழந்தாளிட வைத்த சர்ச்சையில் சிக்கியதனால் அதனை விசாரிப்பதற்கென கொழும்பிலிருந்து விஷேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
    அதன் பின்னர் கடந்த 23.09.2013 அன்று அவருக்கு கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.  அவரது இடத்திற்கு ஊவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டிருந்தார்.
    எனினும் மீண்டும் தற்போது பூஜித்த ஜயசுந்தர கிழக்கு மாகாணம் திரும்பி தனது கடமைப் பொறுப்பையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இடமாற்றம் செய்யப்பட்ட டி.ஐ.ஜி மீண்டும் கிழக்கில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top