• Latest News

    October 05, 2013

    மாரடைப்பை தடுப்பதற்கு திராட்சை பழச்சாறு சிறந்தது!

    திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற் றல் உள்ளது என அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் போல்ட்ஸ் என்பவர் கண்டறிந்துள்ளார் பொதுவாக மாரடை ப்பால் மரணம் ஏற்படுவதற்கும் இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க, 'பிளாவனாய்டு' என்ற வேதிப்பொருள் உதவுகிறது.

    ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே தான் பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின், இதய நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. இத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சை யில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிறஇதய நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான்ஃபோல்ட்ஸ் தெரிவிக்கிறார்.

    இதயநோயளிகளுக்குக் கொடுக்கப்படும் ஆஸ்பிரின் அளவைக் குறைத்து திராட்சை ரசம் அருந்தக் கொடுக்கலாமென அவர் பரிந்துரைக்கிறார்.

    பொதுவாக திராட்சை ரசத்தில் தயாராகும் ஒயினில் இந்த பிளாவனாய்டு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், போதை தரும் ஒயினை ஒரு மருந்தாகப் பரிந்துரைக்க முடியாத நிலை இருந்தது. இப்போது திராட்சை ரசத்தில் அதே அளவு பிளாவனாய்டு இருப்பது தெரிய வந்துள்ளதால், தாராளமாக அது ஆஸ்பிரினின் இடத்தைப் பிடிக்கலாம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாரடைப்பை தடுப்பதற்கு திராட்சை பழச்சாறு சிறந்தது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top