• Latest News

    July 24, 2014

    சமூக ஒருமைப்பாட்டு மாநாடு-2014'

    சமூக ஒருமைப்பாட்டு வாரத்தை முன்னிட்டு கௌரவ தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் வழிகாட்டுதலின் கிழ் ' சமூக ஒருமைப்பாட்டு மாநாடு-2014' ஜூலை மாதம் 20ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 'செயன்முறை மும்மொழி அகராதி'மற்றும்; 'நாம் சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம்; கற்போம்'; இறுவட்டுக்களும் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டன. அதன் முதற் பிரதி அரச கரும மொழிகள் திணைக்கள பணிப்பாளரினால் அமைச்சருக்கு
    வழங்கி வைக்கப்பட்டது. இவ் டிவிடி க்களை அரச கரும மொழிகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம். www.trilingualdictionary.lk/learning.  தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு இவ்வருட சுமூக ஒருமைப்பாட்டு வாரத்தை பொலநறுவை மாவட்டத்தில் இம்மாதம் 14 ம் திகதி ஆரம்பித்து வைத்தது. இம்மாநாட்டிற்கு பல பொது நிறுவனங்களினுடைய தலைவர்கள் அழைக்கப்பட்டு அவர்களது கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இம்மநாட்டில் கலந்து கொண்ட நிந்தவூர் சமூக பொருளாதார மறுமலர்ச்சிக்கான அமைப்பின் தலைவர் ஏ.பி. அப்துல் கபூர் கௌரவ தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவோடு நிற்பதைக் படத்தில் காணலாம்.

    The National Social Integration Conference was held on 20th July 2014 at Mihilaka Madura, BMICH in Colombo under the distinguished patronage of Hon. Vasudeva Nanayakkara, Minister of National Languages and Social Integration to mark the Social Integration week of this year. “Let’s Learn Sinhala, English and Tamil CD and DVD of Practical Trilingual Dictionary” were also launched by the Department of Official Languages. The above DVDs can be downloaded through the Official Website: www.trilingualdictionary.lk/learning. The Ministry of National Languages and Social Integration has initiated an Island wide programme to mark the Social Integration week 14-20 July 2014.This year’s Inauguration Ceremony was held in Pollonnaruwa. For this conference, Social Service Organizations were also invited to share stakeholders’ experiences on Social Integration. Here the President of Socio Economic Renaissance Organization- Nintavur Mr. A.B. Abdul Gafoor, JP who took part in this Conference took a very pleasant moment with the Minister.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சமூக ஒருமைப்பாட்டு மாநாடு-2014' Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top