• Latest News

    November 30, 2013

    ஈரானில் பயங்கர நிலநடுக்கம்

    ஈரானில் அணு உலை அமைந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பலியாயினர். ஈரானில் அமைக்கப்படும் அணு உலைகள் மற்றும் யுரேனியம் செறிவூட்டல் கட்டுப்பாடுகள் தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதையடுத்து ஈரானில் இருக்கும் அணு உலைகளை பார்வையிட ஐநா நிபுணர்கள் வர உள்ளனர். 5 சதவீதத்துக்கு மேல் யுரேனியத்தை செறிவூட்ட மாட்டோம் என்று சர்வதேச நாடுகளுக்கு ஈரான் உறுதி அளித்துள்ளது.
    இந்நிலையில் நேற்று ஈரானில் அணு உலை அமைந்த பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானின் பஸ்கர் என்ற இடத்தில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள போரோஜான் என்ற இடத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் அணு உலை ஒன்றை ஈரான் அரசு நிறுவியுள்ளது. ஈரான் புவியியல் ஆய்வு மைய அதிகாரி கதாமி கூறுகையில், இப்பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கின என்று தெரிவித்தார். இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான குடியிருப்புகள் நொறுங்கின. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பலியாயினர்.

    எனினும், நிலநடுக்கம் காரணமாக அணு உலைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அணு உலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நிலநடுக்கம் காரணமாக அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டால் அண்டை நாடான சவுதியும் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 26 ஆயிரம் பேர் வரை பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஈரானில் பயங்கர நிலநடுக்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top