தம்புள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி
வந்த 13 உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்ற உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.என ஊடக தகவல்கள் குறிப்பிடுகிறது .தம்புள்ள
பிரதேசத்தில் நாளுக்கு நாள் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தம்புள்ள பொலிஸ் நிலையத்தின் மோட்டார்
போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்களே இவ்வாறு இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி
உள்ளிட்ட 13 பெர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தம்புள்ள பிரதேசத்தில் பாரியளவிலான 24 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டில் மூன்று விபத்துக்களே
இடம்பெற்றுள்ளதாக தம்புள்ள பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்
தெரிவித்துள்ளனர். பொலிஸ் அத்தியட்சகரின் இடமாற்ற உத்தரவிற்கு தம்புள்ள,
சீகிரிய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.எனவும்
அந்த தகவல்கள் குறிப்பிடுகிறது .
0 comments:
Post a Comment