ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு,
மிகவும் முக்கியமான தீர்மானத்தை எடுப்பதற்கான காலம் வந்துள்ளதாக அந்தக்
கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.அரசாங்கத்திற்கு தற்போது முஸ்லிம் காங்கிரஸ்சின் மீது நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாக ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்து :-
“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த
அரசாங்கத்திற்குள் இணைய நேர்ந்த, கட்டத்தில் இருந்து தொடர்ந்து சவால்களை
சந்தித்து வருகின்றோம். இன்று இருக்கிற கட்டத்தில் அரசாங்கத்திற்கும்
முஸ்லிம் காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை. ஒட்டுமொத்த முஸ்லிம்
மக்களுக்கும் முஸ்லீம் காங்கிரஸின் அரசியல் சம்பந்தமான ஓர் தடுமாற்றம்.
இந்த நிலையில் நாங்கள் நிதானம் இழந்து பக்குவம் இழந்து அவசப்படுவது என்பது
நல்ல முடிவாக அமையாது. எனவே தான் எல்லா விஷயங்களையும் ஆலோசித்துப் பார்க்க
வேண்டியுள்ளது.
இன்று அமைச்சர்கள் மலிந்து போயிருக்கிற ஒரு
காலம். கல்லெறிந்தால் அமைச்சர் தலையிலே விழுகின்ற ஒரு நிலையிலே இந்த
அமைச்சுப் பதவியைப் பற்றி பேசுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. மிக உறுதியான
ஒரு முடிவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் வந்தாக வேண்டும் என்ற கட்டத்தை
நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். அதிலே எந்த சந்தேகமும் கிடையாது”- TC
0 comments:
Post a Comment