• Latest News

    November 17, 2013

    இந்நாட்டு கடல் எல்லையில் மீன் பிடிப்பதற்கு சீனப் படகளுக்கு எவ்வித அதிகாரமுமில்லை!

    எந்தவொரு சீன மீன்பிடிப் படகுகளுக்கு இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பதற்கு அநுமதி வழங்கப்படவில்லை என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

    பெருந்தொகையான சீன மீனவப் படகுகள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, பெருந்தொகை மீன்களைப் பிடித்துச் செல்வதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அக்குற்றச் சாட்டு பற்றி பணிப்பாளர் நாயகத்திடம் கேட்கப்பட்ட வினாவுக்கு விடையளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
    ஆயினும், சர்வதேச கடல் எல்லைக்குள் மீனவத் தொழிலில் ஈடுபடுவதற்கு எந்தவொரு நாட்டுக்கும் உரிமை இருக்கின்றது எனவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கைக்குச் சொந்தமான 517,000 சதுர கிலோமீற்றர் கடல் எல்லையினுள் பிறநாட்டு மீன்பிடிப் படகுகள் அத்துமீறி நுழைந்தால், அவர்களை கடற்படையினர் கைது செய்வார்கள் எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
    (கேஎப்)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்நாட்டு கடல் எல்லையில் மீன் பிடிப்பதற்கு சீனப் படகளுக்கு எவ்வித அதிகாரமுமில்லை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top