கல்முனை முதல்வராக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியும், முதுமானியுமான கெளரவா நிசாம் காரியப்பர் அவர்கள் எதிர்வரும் (18.11.2013) திங்கட்கிழமை காலை மணிக்கு கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பெற்கவுள்ளார்.கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து மாநகர சபை வரை வரவேற்கப்படவுள்ள இவ்வரவேற்பினை கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள், வர்த்தக சமூகங்கள், விளையாட்டு கழகங்கள், பொது அமைப்புக்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அன்று மாலை 05 மணிக்கு பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதம அதிதியாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான ரஊப் ஹக்கீம், கெளரவா அதிதிகளாக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசனலி, கல்முனை அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், ஏ.எல். தவம், ஏ.எல்.எம். நஸீர், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
0 comments:
Post a Comment