பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் 23 ஆவது உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாக அரங்கில் கோலாகமாக ஆரம்பமாகியது.
தாமரைத்தடாகம் கலை அரங்கிற்கு வருகைத்தந்த வெளிநாட்டுத் தலைவர்களையும் பிரதி நிதிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் பாரியாரான முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அன்னாரின பாரியார் ஆகியோர் வரவேற்றனர்.
பாடசாலை மாணவ மாணவிகளினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.வரவேற்பு கீதமும் இசைக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டில் உரை நிகழ்த்தினார் .
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரும் அவுஸ்திரேலிய பிரதமருமான டொனி அயோட் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
இம்மாநாட்டில் 53 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment