• Latest News

    November 14, 2013

    முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்வில் சலசலப்பு!


    முஸ்லிம் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, கிறாஅத் ஓதுவதற்கு ஆளில்லாததால் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்த (சிடி) இறுவட்டிலிருந்து கிறாஅத் ஒலிக்கச் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் என்ற பெயரில் அமைப்பை வைத்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, நடைமுறையிலும் காட்டுதல் வேண்டும். சிலரின் பழைப்புக்கு முஸ்லிம் என்ற பெயரை யாரும் பயன்படுத்திக் கொள்ளவதற்கு அனுமதிக்க முடியாது.
    இன்றைய இந்நிகழ்வு பற்றி எமது செய்தியாளர் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம்  பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் நடாத்தப்படும்  யு.என்.எஸ்.சி.ஆர்  1325 வது பிரேரணை தொடர்பான  மக்கள் மன்ற நிகழ்வும்  ஊடகவியலாளர்களுடனான ஊடக அரங்கும் கல்முனை கிறிஸ்தா இல்ல மண்டபத்தில் இன்று (14.11.2013) முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது.

    முஸ்லிம்  பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின்  ஸ்தாபகர் கலாநிதி ஜெசீமா இஸ்மாயில்  உட்பட  சமயப் பெரியார்கள்,
    கல்விமான்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    அங்கு விழிப்பூட்டல் நிகழ்வுகளும், யு.என்.எஸ்.சி.ஆர்  1325 வது பிரேரணை  தொடர்பான விளக்கவுரைகளும்  இடம்பெற்றன.

    அதேவேளை, விளிப்பூட்டல்  நிகழ்வுகளில் ஒன்றாக இடம் பெற்ற வில்லுப் பாட்டுக் கலாச்சார நிகழ்வு தொடர்பாகஇ அங்கு உரையாற்றிய வைத்தியர் ஒருவரால் விமர்சிக்கப்பட்டது. அவ் வைத்தியர் இதுதொடர்பாக விமர்சிக்கும்  போது, அங்கு இருந்த சிரேஸ்ட  ஊடகவியலாளர் ஒருவர்  குறித்த வைத்தியர்,  வைத்தியசாலை ஒன்றில் பெண் உரிமை மீறலை செய்தவர் என்றும், இந்த மேடையில் குறிப்பாக பெண் உரிமை பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர் என்றும் முணு முணுத்தார்.குறிப்பிட்ட ஊடகவியலாளர் அந்த வைத்தியரை இடையில் தடுப்பதற்கும் அந்த ஊடகவியலாளர் முயற்சி செய்தார்.

    இதேவேளை,  இன்றைய தினம் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் பலர் ஆஷுரா நோன்பு நோற்றவர்களாக இருந்தனர். முஸ்லிம் அமைப்பொன்று இவ்வாறானதொரு தினத்தில் இதுபோன்ற நிகழ்வொன்றை (தாக சாந்தி மற்றும் மதிய போசனத்துடன்) ஒழுங்கு செய்தமை தவறு என்றும் சிலர் குறை பட்டுக் கொண்டனர்.

    அத்துடன்இ இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த மண்டபம் போதாமையால் நிகழ்வின் இடையிடையே தடங்கல்களும் ஏற்பட்டன. ஊடகவியலாளர்களுடனான ஊடக அரங்கின்போதுஇ ஊடகவியலாலர்களுக்கு சுயமாக கேள்விகள் கேட்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும்  ஊடகவியலாளர்களால் விசனங்கள்  தெரிவிக்கப்பட்டன.

    மிக முக்கியமான விடயமாக நிகழ்வின் ஆரம்பத்தில் சமயப் பெரியார்களின் சமயவழிபாடுகள் இடம்பெற்றன. பௌத்த சமையம், இந்து சமையம், கிறிஸ்தவ சமயம்  போன்ற  சமயங்களை சார்ந்த சமயப் பெரியார்கள் தத்தமது சமய வழிபாடுகளை நடத்தினார்கள். இஸ்லாமிய சமயத்தை பிரதிநிதித்துவப் படுத்தி எத்தனையோ மௌலவிமார்கள் அவ்அவையில் வீற்றிருந்தும் திருக் குர் ஆன்  வசனத்தை ஓத  ஒருத்தர் கூட இல்லாமல் ஒலிபெருக்கியில் பதிவு செய்யப்பட்ட குர் ஆன் வசனம் ஒலிபரப்பப்பட்டதானது பலராலும் விமர்சிக்கப்பட்டது.
    இத்தனைக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்த அமைப்பின் பெயர் முஸ்லிம்  பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி என்பதாகும்.

    முஸ்லிம் என்ற பெயரை தாங்கியுள்ள அரசசார்பற்ற நிறுவனமொன்று அதன் செயற்பாட்டிலும் தனித்துவத்தை காட்டுதல் வேண்டும். மற்றைய அமைப்புக்களைபர் போன்று செயற்பட முடியாது. உரிமை பற்றிய விடயங்களை தெளிவு படுத்துவதற்கு முற்படுபவர்கள் சகலவிடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமல்லவா?
     


    படங்கள்: கலசம்.கொம்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்வில் சலசலப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top