• Latest News

    November 14, 2013

    கல்முனையின் அபிவிருத்தியை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் மன்சூரின் காலம் பொற்காலம்

                              எஸ்.அஷ்ரப்கான்;
    கல்முனையின் அபிவிருத்தியை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் மன்சூரின்  காலம் பொற்காலம் என கூறியதன் மூலம் முஸ்லிம் காங்கிரசின் காலம் இருண்ட காலம் என பொருட்படுத்திய மசூர் மௌலானாவின் துணிச்சலை நாம் வெகுவாக பாராட்டுகின்றோம் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்தார்.

    கட்சியின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற சமகால கல்முனையின் அரசியல் நிலை பற்றிய கருத்தரங்கிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,
    மசூர் மௌலானா நீண்ட காலம் அரசியல் வராலாறு கொண்டவர். தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் மட்ட உறுப்பினராக இருப்பதுடன் அக்கட்சியின் கல்முனை மாநகர மேயராகவும் இருந்தவர். கல்முனையை முன்னாள் அமைச்சரின் மன்சூருக்குப்பின் கடந்த இருபது வருடங்களாக முஸ்லிம் காங்கிரசே ஆட்சி செய்து வருகிறது.

     இத்தகையதொரு நிலையில் பதினேழு வருட வரலாற்றைக்;கொண்ட ஏ ஆர் எம் மன்சூரின் ஆட்சிக்காலம் கல்முனையின் பொற்காலம் என்றால் முஸ்லிம் காங்கிரசின் இந்த இருபது வருட கால ஆட்சி கல்முனையின் இருண்ட காலம் என்பதை அக்கட்சியின் மேயராக இருந்த மசூர் மௌலானாவே சுட்டிக்காட்டியிருப்பது உண்மையை உள்ளபடி சொல்ல வேண்டும் என்ற அவரது துணிச்சலைக்காட்டுகிறது. தான் கல்முனையின் முஸ்லிம் காங்கிரஸ் மேயராக இருந்தும் தனது காலத்தை பொற்காலம் என கூறாது மன்சூரின் காலத்திலேயே கல்முனை பாரிய அபிவிருத்தியை கண்டது என்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியில் கல்முனை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது என அவர் தெளிவுபடுத்தியமை பாராட்டுக்குரியது மட்டுமல்ல கல்முனை மக்களை சிந்திக்கவும் வைத்துள்ளது.

    இத்தகைய ஒரு அரசியல் முதிர்ச்சியுள்ள  ஒருவரின் பேச்சைக்கேட்ட பின்பாவது கல்முனை மக்கள்  முஸ்லிம் காங்கிரசை நம்பிக்கொண்டிருக்க முடியுமா? என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

     அமைச்சர் மன்சூரின் காலத்தில் மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான புகையிரதப்பாதை அமைப்பதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டிருந்தார். ஆட்சி மாற்றம் காரணமாக அவை தடைப்பட்டபோது இதற்காக முஸ்லிம் காங்கிரஸ் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. தற்போது ஹம்பாந்தோட்டையிலிருந்து புகையிரத பாதையை அக்கரைப்பற்றுக்கு கொண்டு வரப்போவதாக அமைச்சர் அதாவுள்ளா கூறுவது மூக்கை சுற்றி தொடுவதாகவும், சிங்கள இனவாதிகளுக்கு நன்மை தருவதாகவுமே அமையுமே தவிர தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை தராது. ஆகவே முன்னாள் அமைச்சர் மன்சூரின் மட்டக்களப்பு பொத்துவில் ரயில் பாதை பற்றி சிந்திப்பது அவசியமாகும்.

    இவ்வாறு தன்னலம் பாராமல் கல்முனைக்காக செயற்பட்ட மன்சூர் போன்றவர்கள் கல்முனையில் உருவாக வேண்டுமானால் கட்சி என்ற பிடிவாதத்திலிருந்து விடுபடுவதன் மூலமே  மக்களுக்காக பேசுபவர்களையும், செயற்பாடுடையவர்களையும் நாம் வென்றெடுக்க முடியும். இல்லாவிடில் நமது அடுத்த சந்ததியும் இதே இருண்ட யுகத்தில் வாழ வேண்டியேற்படும் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனையின் அபிவிருத்தியை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் மன்சூரின் காலம் பொற்காலம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top