ஜெனீவாவில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக நடந்துவந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஈரானின் அணுத்திட்டம் தொடர்பில் அந்நாடு உலக வல்லரசுகளுடன் இடைக்கால உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளது.
இதன் பலனாக, பல தசாப் தங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக ஈரானின் அணுத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
இந்த உடன்பாட்டின்படி, செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பைக் குறைத்துக்கொள்ள ஈரான் முன்வந்துள்ளது. அதற்கு கைமாறாக ஈரான் மீதுள்ள சில தடைகள் தளர்த்தப்படும்.இதன் பலனாக, பல தசாப் தங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக ஈரானின் அணுத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கொண்டு அணு ஆயுதங்கள் தயாரிக்கக்கூடும் என்ற அச்சம் மேற்குலகிடம் இருந்துவருகிறது.
இந்த ஒப்பந்தம் ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். நிரந்தர ஒப்பந்தம் ஒன்றை எட்டும் பேச்சுவார்த்தைகளுக்கான அவகாசமாக இந்தக் காலம் பயன்படுத்தப்படும்.
இதேவேளை, யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு ஈரானுக்கு உள்ள உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாட் சரீப் கூறியுள்ளார்.
ஆனால், ஈரான் கூறுவதைப் போல அந்த உரிமையை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment