எம்.எஸ்.என்;
ஜெயபாலனின் கைது குறித்து கவலை தெரிவித்துள்ள மு.காவின் தலைவர், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம், நிந்தவூர் பிரதேசத்தில் சுமார் ஒரு மாத காலமாக இடம் பெற்றுக் கொண்டிருக்கும் அசம்பாவிதங்கள் பற்றியும், அதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காதிருப்பதும் தங்களுக்கு கவலை அளிப்பதாக அம்பாரை மாவட்ட மு.காவின் ஆதரவாளர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நிந்தவூர் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலில் 21 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களின் iகுது பற்றி எந்த கவலையும் ரவூப் ஹக்கிம் தெரிவிக்கவில்லை. நிந்தவூரில் இவ்வாறு நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது ரவூப் ஹக்கிம் எங்கே இருந்தார் என்று மு.காவின் நிந்தவூர் பிரதேச ஆதரவாளர்கள் கேட்கின்றார்கள்.

இதே வேளை, மிகவும் துணிச்சலாக முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் மு.காவின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி எம்.பி தமது சொந்த மண்ணின் மக்கள் மர்ம குழுவினரால் கஸ்டங்களை அனுபவிக்கும் போது, ஒரு அறிக்கைதானும் விடாமல் இருப்பதும் ஏனோ? என நிந்தவூர் பிரதேச மக்கள் கேட்கின்றார்கள்
நிந்தவூர் பிரதேச மக்களின் ஒரு சொற்ப ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கூட நிந்தவூர் பிரதேச மக்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வில்லையாம்.
இதுவே ஒரு தேர்தல் காலமாக இருந்தால் ஆளுக்கு ஆள் போட்டி போட்டுக் கொண்டு நிந்தவூருக்கு படை எடுத்திருப்பார்கள் எனவும் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
0 comments:
Post a Comment