• Latest News

    November 14, 2013

    மருதமுனை தாருல் ஹுதா அறபு கல்லூரிக்கு புதிய கட்டிடம்


    பி.எம்.எம்.ஏ.காதர்
    மருதமுனை தாருல் ஹுதா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரிக் கட்டடத்திற்கான  அடிக்கல் நாட்டிய நிகழ்வு இன்று மாலை (14-11-2013) கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.எம். ஹாரிஸ் தலைமையில் நடைபெற்றது. பரஹகதெனிய ஜமாத் அன்சாரிஸ் சுன்னத்தில் முகம்மதியாவின் அனுசரனையில் இந்த நிர்மானப்பணி ஆரம்பித்தவைக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிகழ்வில் சஊதி அரேபியாவைச் சேர்ந்த மஆலிஸ்,  ஷெய்க் அப்துல் அஸீஸ் ஹுமைன் அல்ஹுமையின, ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முகம்மதியாவின் அமீர் அஷ;செய்க் அபூபக்கர் சிதிதீக் மதனி, செயலாளர் அஷசெய்க் கலிலுர்றஹ்மான் தாருல் ஹுதா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி அதிபர் அஷசெய்க் எம்.எல். முபாரக் மதனி மற்றும் அஷசெய்க் ஏ. அபூஉபைதா மதனி, சட்டத்தரணி அமீருள் அன்சார் மொலானா, தென்கிழக்குப் பல்கலைக் கழக ஆங்கில மொழிப்பிரிவின் தலைவர் கலாநிதி ஏ.எம்.நவாஸ், விரிவுரையாளர் எம்.எம்.எம்.பாசில் மற்றும்பள்ளி வாசல்களின் தலைவர்கள் ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் வர்த்தகர்கள், உள்ளீட்ட ஊர்பிரமுகர்களும் கலந்து  கொண்டனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருதமுனை தாருல் ஹுதா அறபு கல்லூரிக்கு புதிய கட்டிடம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top