சாதனையாளர்களை
சந்தோஷப்படுத்தும் போது மேலும் அவர்கள் சாதனை
படைக்க உந்தப்படுவார்கள் என்பது உண்மையாகும். முஸ்லிம்களின் தற்கால கல்வி வளர்ச்சியில் அம்பாறை மாவட்டம் முக்கிய
இடத்தை வகிக்கின்றது என்றால் யாரும் மறுப்பதிற்கில்லை. மேலும், சம்மாந்துறைப் பிரதேசத்தின் சனத்தொகை ரீதியாக நோக்கும்
போது ஒப்பீட்டளவில் மந்தமே.
இலங்கையில்
காணப்படுகின்ற தனித்தேர்தல் தொகுதியில் அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட ஒரு தொகுதியாக
குறிப்பிடுவிடுதென்றால் அது சம்மாந்துறையாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும்,
ஒரு சில தரவுகளை எடுத்து நோக்கினாலும் அதன் உண்மைத்தன்மை புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.
குறிப்பாக கடந்த முறை நடாத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சையில் 127 மாணவர்கள் சம்மாந்துறை
வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால் இம் முறை 117 மாணவர்கள் மாத்திரமே
தெரிவு செய்யப்பட்டார்கள். இது போல் சாதாரண
தரம், உயர் தரப் பரீடசைப் பேறுகளும் புடம்போட்டு காட்டுகின்றன.
இதற்கு
பல காரணங்கள் கூறினாலும், அப்பிரதேச மக்களின் அக்கறையின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம்
என எண்ணத்தோன்றுகின்றது. இங்கு நிறுவன ரீதியான எந்த அமைப்புக்களும் தேசிய ரீதியில்
வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி மகிழ்ச்சியுட்டக்கூடிய நிகழ்வுகள் அரிதிலும், அரிது.
அத்துடன் இலங்கையில் அதிகமான குழுக்கள் இணைந்த
சங்கங்கைளைக் கொண்ட ஒரு பிரதேசமாகவும் இது காணப்படுகின்றது என்ற உண்மையையும் உங்களுக்கு
எத்தி வைக்க விரும்புகிறேன்.
ஒரு
நீண்ட இடைவெளிக்குப் பின் சமூகநல மேம்பாட்டு ஒன்றியம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த
மாணவர்களை பாராட்டி விழாவெடுத்த நிகழ்வொன்று நடந்தேறியுள்ளது. இதனை முஸ்லிம் கல்விச்
சமூகம் வரவேற்கின்றது.
இந்
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதி அமைச்சருமான
ரவுப் ஹக்கிம் அவர்கள் கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழும், சித்திடையச்
செய்த பாடசாலை அதிபர்களுக்கு நினைவு கிண்ணமும் வழங்கப்பட்டது ஒரு விசேட அம்சமாகும்.
இங்கு
84 மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு நடாத்தப்பட்டது. இதில் 41 மாணவர்கள் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் மாணவர்கள்
என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும். அதற்காக அப்பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள்
பாராட்டப்பட்டதுடன் இந் நிகழ்விற்கு அப் பாடசாலையின் சார்பாக பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம்
அவர்களும் கலந்துகொண்டார்.
மேலும்,
கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
இவ்வாறான
நிகழ்வுகள் ஊக்கமுடைய மாணவர்களை ஊக்கப்படுத்த உதவுவதுடன் எதிர்கால கல்வி மேம்பாட்டிற்கு
உரமூட்டும் என்பதில் ஐயமில்லை.
0 comments:
Post a Comment