• Latest News

    November 25, 2013

    கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிப் பிரச்சினைகள் பற்றி திருகோணமலையில் கலந்துரையாடல்

    கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாய கால்நடை உற்பத்தியாளர்களின் கால் நடைக்கான மேய்ச்சல் தரை மற்றும் சுவூகரிக்கப்பட்டு வரும் காணிகளை மீளப் பெற்றுக்கொடுத்தல் தொடர்பாக நாங்கள் கலந்துரையாடி அதற்கு இலகுவான முறையில் தீர்வு காண்பதற்கு இன்று முயற்சித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
    இவ்வாறு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் ஹக்கீம்   செவ்வாய்க்கிழமை (19) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, அபிவிருத்தி, உற்பத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏற்பட்டில் நடைபெற்ற  கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
    மேலும் இங்கு விவசாய கால் நடை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினை, விறகு வெட்டுதல் இன்னும் பல பிரச்சினைகள் பற்றியும் அதற்கான உரிய தீர்வினையும் பெற்றுத்தருமாறு அமைச்சர் ஹக்கீம் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கேட்டுக்கொண்டார்.
    30 வருட காலம் இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக காணப்பட்ட நெருக்கடியின் நிமித்தம் எங்களால் ஒன்றும் செய்ய முடியாதிருந்தது. ஆனாலும் தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகியுள்ள நிலையில் நாம் பல தீர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். இனி வரும் காலங்களில் இப் பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வினை இந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்தார்.
    தாங்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுமான எங்களுக்கு இருக்கும் கடமையை நாங்கள் ஒன்றாக ஆராய்ந்து இங்கு நிறைவேற்றினோம்.
    யுத்தத்தின் பின் துன்னக்காரு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காணி உறுதி சம்பந்தமான பிரச்சினை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது, துன்னாக்காரு பிரதேச காணி உறுதிகள் சம்பந்தமான ஆவணங்கள் காணப்படுகின்றன மற்றும் விடுதலைப் புலிகள் இக் காணி உறுதிகளை அழிவுக்குட்படுத்தியுள்ள சந்தர்ப்பங்களும் உள்ளன. அது மட்டுமல்ல கமத்தொழில் ஒழுங்கமைப்புக்களின் குழு அறிக்கைகளும் இங்கு காணப்படுகின்றன. இவற்றை கொண்டு ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை  இங்குள்ள அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என நாம் நம்புகின்றோம் என்று அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
    இக் கலந்துரையாடலில் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், மு.கா செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண தவிசாளர் ஆரியவதி, கலப்பதி மற்றும்  கிழக்கு மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், அமைச்சு அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிப் பிரச்சினைகள் பற்றி திருகோணமலையில் கலந்துரையாடல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top