பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு கொழும்பில் நடைபெறுவதை முன்னிட்டு, கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 17ம் திகதிவரை இது அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் நீதிமன்றம் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளதுடன் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிமன்றம் மேற்படி ஆர்ப்பாட்டங்கள் தடையுத்தரவை விதித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு நடைபெறும் மாநாட்டு மண்டப பிரதேசங்கள் அரச தலைவர்கள் வருகை தரும் வீதிகள் உட்பட பல பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சகல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment