நிந்தவூர் பிரதேசத்தில் தொடர்ந்தும் இரவு வேளைகளில் மர்ம நபர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. இது பற்றி நிந்தவூர் பெரிய ஜும்ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எம்.ஏ.எம்.றஸீனிடம் கேட்ட போது, அவ்வாறான முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், அது பற்றி சம்மாந்துறைப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவர் தெரிவிக்கையில், நிந்தவூர் பிரதேசத்தில் இரவு வேளைகளில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு மர்ம நபர்களின் நடமாட்டமும், செயல்களும் பாதகமாக அமைந்துள்ளன. ஆதலால் பொலிஸ் உயர் அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஆவண செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

0 comments:
Post a Comment