• Latest News

    November 27, 2013

    கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை

    எஸ்.அஷ்ரப்கான்;
     கல்முனை ஸாஹிராக் கல்லூரி பிரதி அதிபரின் தற்காலிக இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்  என வலியுறுத்தி தீர்மானம் ஒன்றினை கல்லூரியின் மகாசபை நிறைவேற்றியுள்ளதாக மகாசபையின் இணைச்செயலாளர் டாக்டர் வை.எல்.எம்.யூசுப் தெரிவித்தார். இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

    அண்மையில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கல்லூயின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. இதில் எமது மகாசபை தலையிட்டு பிரதேச அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் வழமையான நிலைக்கு கல்லூயினை கொண்டு வந்தோம். இதனையடுத்து தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிக் கல்விப்பணிப்பாளர் உட்பட அவரது சகோதரர்கள் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

    இவ்வாறிக்கையில் கல்லூயின் பிரதி அதிபர் கபூருக்கு தற்காலிக இடமாற்றம் மாகாண கல்விப்பணிப்பாளரினால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    தற்போது கல்லூhயில் இறுதி ஆண்டுப் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கல்லூரிக்கு நிரந்தர அதிபர் இல்லாத சூழ்நிலையில் கல்லூரியின் சகல நடவடிக்கைகளையும் பிரதி அதிபரே மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் இவ்வாறான இடமாற்றம் இத்தருணத்தில் பொறுத்தமானதல்ல என மகாசபை கருதுகின்றது.

    மேலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான நேர சூசி தயாரித்தல், பகுதித்தலைவர்களை நியமித்தல், வகுப்பறைகளை தயார்படுத்தல் போன்ற வேலைகளைத் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.இவைகளை கவனத்தில் எடுத்தே மகாசபை இவ்விடமாற்றத்தினை இரத்து செய்வது என ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

    இதனடிப்படையில்  எமது மகாசபை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்; யூ.எல்.எம்.ஹாசிம் ஆகியோரை சந்தித்து இவ்விடமாற்றத்தினை இரத்து செய்வது பற்றி பேசவுள்ளோம் அத்துடன் கல்லூரியின் கல்வி, பௌதீக அபிவிருத்திகள் மற்றும் நிரந்தர அதிபரினை நியமித்தல் பற்றியும் விரிவாக கலந்துரையாடவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top