எஸ்.ஆர்;
நிந்தவூர் இஸ்லாமிய சமூக நலன்புரி மறுமலர்ச்சி அமைப்பு (இஸ்வா) இன்று மாலை 200 மாணவ, மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது.
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் 11வது வருடாந்த நிகழ்வு இன்று நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில், இஸ்வா அமைப்பின் தலைவர் மௌலவி எச்.அஜ்மல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம.ரி.ஹஸன் அலி, பைசால் காசிம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். சிறப்பு அதிதிகளாக இநிந்தவூர் பிரதேச செயலாளர் ஜனாபா. ஆர்.யூ. ஜெலீல் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இஸ்வா அமைப்பு நிந்தவூர் பிரதேசத்தில் வறிய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பல்வேறு பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றது. அத்தோடு, நிந்தவூர் பிரதேசத்தில் இஸ்லாமிய விழுமியங்களை பாதுகாத்துக் கொள்கின்ற நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருப்பதோடு, இன்னும் பல சமூகப் பணிகளில் இவ்வமைப்பு செயற்பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment