
மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டது.
மன்னார் நீதிவானின் உத்தரவிற்கமைவாக இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் குறித்த மனிதப்புதைகுழி தோண்டும் நடவடிக்கை ஆரம்பமாகியது.
இதன் போது மீட்கப்பட்ட மனித எச்சங்களை சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண உட்பட அவருடன் வருகை தந்திருந்த 5 வைத்திய நிபுணர்களும் இணைந்து பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதோடு அதனைச் சூழ்ந்த பகுதிகளும் தோண்டப்பட்டன.
இதேவேளைஇ முழுமையாக மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளை மீட்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனித புதை குழி தோண்டும் போது உடற்கூற்று நிபுணர் ஆர்.எம்.பி.ராஜகருணாஇ அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரி பி.யு.மடவலஇதொல்பொருள் திணைக்கள அதிகாரி ஏ.விஜயரத்னஇபேராதணை பகுப்பாய்வு திணைக்கள அதிகாரி கே.நந்தசேனஇ மன்னார் பொலிஸ் அத்தியட்சர் டி. லக்சிறி விஜயசேனஇ உதவி பொலிஸ் அத்தியட்சர் ஐ.வி.ரி.சுகதபாலஇ மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இதே வேளை குறித்த மனித எழுலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.மனித எழும்புக்கூடுகள் மீட்கும் பணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியில் இருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் நீர் இணைப்பிற்காக பள்ளம் தோண்டிய போது மூன்று மண்டையோடுகளும் மனித எழும்புகளும் மீட்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த மனித புதைகுழி மன்னார் நீதவான் முன்னிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் தோண்டப்படது.
இதன் போது சுமார் 10 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment