• Latest News

    December 22, 2013

    45 தமிழ் பெண் இராணுவ வீராங்கனைகள் பயிற்சி முடித்து சேவையில் இணைவு

    இலங்கை வரலாற்றின் முதல் தடவையாக 45 தமிழ் பெண் இராணுவ வீராங்கனைகளும் 10 சிங்கள வீராங்கனைகளும் பயிற்சியை முடித்து வெளி யேறி தேசிய சேவையில் இணைந்தனர்.இவர்கள் பயிற்சி முடித்து வெளியேறும் அணி வகுப்பு மரியாதை அநுராதபுரத்தில் உள்ள இலங்கை இராணுவத்தின் 4 வது சிக்னல் கார்ப்ஸ்  மைதானத்தில் கடந்த புதன் கிழமை நடந்தது.
    வன்னி பாதுகாப்பு படைகளின் தளபதி  மேஜர் ஜெனரல் போனிபஸ்  பெரேரா பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்த வைபவம் அலங்கார மின்னொளியிர் இரவு நேரம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
    இராணுவ பயிற்சிக்கு மேலதிகமாக இவர்களுக்கு    அழகுக் கலைஇ  மலர் அலங்காரம் இ  மற்றும் திருமண ஆடை அலங்காரம் போன்ற துறைகளிலும்  அடிப்படை பயிற்சி வழங்கப்படுள்ளது.
    நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும்  கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் சமரசத் திட்டங்களுக்கு உதவும் நோக்கில் தமிழ் இராணவ வீராங்கணைகள்  வடக்கு பகுதிகளில் பணியாற்றவுள்ளனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 45 தமிழ் பெண் இராணுவ வீராங்கனைகள் பயிற்சி முடித்து சேவையில் இணைவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top