• Latest News

    December 22, 2013

    2011 தாக்குதல் தொடர்பில் சவுதிக்கு எதிராக வழக்கு!

    2001 செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சவுதி அரேபியாவுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு அனுமதி வழங்குவதற்கு அமெரிக்காவின் இரண்டாவது சபையின் நீதிமன்றம் ஒன்றின் மூலம் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

    தாக்குதலில் 3000 இற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் உறுப்பினர்கள் குறிப்பிடும்போது தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் சவுதி அரேபியா அல்கைதா இயக்கத்திற்கு ஆதரவு வழங்கியிருப்பதற்கான நிறைய ஆதாரங்கள் உள்ளன எனக் கூறியுள்ளன
    தாக்குதல் இடம்பெற்று ஓர் ஆண்டின் பின்னர் (2002) நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், சவுதி அரேபியாவுடன் தொடர்புற்ற நலன்புரி அமைப்புக்களினால் அல்கைதா தாக்குதலுக்கு ஆயத்தமாவதற்கு பல்வேறு உதவிகளையும் செய்துள்ளது எனவும் குற்றம் சுமத்தப்பட்டது.

    எதுஎவ்வாறாயினும் 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாவட்ட நீதிபதி ரிசர்ட் கேஸி தீர்ப்பு வழங்கும்போது, வெளிநாடு தொடர்பான பிரிவொன்றின் கீழ் சவுதி அரேபியாவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    2008 ஆம் ஆண்டு இரண்டாவது சபையின் நீதிமன்றம் ஒன்றின் மூலம் அந்தத் தீர்ப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், 2011 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தொடர்பில் தீர்ப்பு வழங்கும்போது வேறுவிதமாக தீர்ப்பு வழங்கியதுடன், சவுதிக்கு எதிராக வழக்கு விசாரணை நடாத்துவது அல்லது நடத்தாமலிருப்பது தொடர்பிலான தீர்ப்பு வழங்குவதற்கு மீயுயர் நீதிமன்றத்திடம விடப்பட்டது.

    அதற்கேற்ப விசாரிப்பதற்கு அனுமதியளித்து மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி தாக்குதலுடன் தொடர்புற்ற 19 பேரில் 15 பேர் சவுதி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தத் தாக்குதல் தொடர்பில் பெரும்பாலானோர் சந்தேகங்களை வெளியிட்டுள்ளதுடன், சீஐஏ வின் முன்னாள் அதிகாரிகளில் ஒருவரான ஸுஸன் லிண்டர் குறிப்பிடும்போது, இத்தாக்குதல் தொடர்பில் அமெரிக்க உளவுப் பிரிவினர் தெரிந்திருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2011 தாக்குதல் தொடர்பில் சவுதிக்கு எதிராக வழக்கு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top