• Latest News

    December 15, 2013

    கல்முனை தமிழ் உபபிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவதனால் இன முரண்பாடு ஏற்படுமா? எந்த வகையில்; கேள்வி கேட்கின்றார் கி.மா.ச உறுப்பினர் நடராசா

    gp.vk;.vk;.V.fhjh;;;;
    கல்முனை தமிழ் பிரதேச செயலகம் அமைந்தால் தமிழ் முஸ்லிம்களிடையே முரண்பாடு வலுக்கும், பிரிவினை ஏற்படும் என்றெல்லாம் பத்திரிகைகள் மூலம் அறிக்கைகள் விடும் முஸ்லிம் அரசியல் தலைவர்களே!

    உங்கள் அறிக்கைகளை அவதானித்தால் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் ஒரு சதி நடவடிக்கை போலவே புலப்படுவது மட்டுமல்ல, இனமுரண்பாட்டை தோற்றுவித்;து அதன் மூலம்; அப்பாவி முஸ்லிம் மக்களின் அரசியல் ஆதரவினைப் பெறமுயற்சிக்கும் ஒரு தந்திரோபாயத்திட்டம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் க. நடராசா தெரிவித்துள்ளார்.

    அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
    அரசியல் வளர்க்க வேண்டும் என்று நினைத்து இனங்களுக்கிடையில் பகையுணர்வை ஏற்படுத்தும் அறிக்கைகளை விடுவதையோ அல்லது பேசுவதையோ தவிர்த்து தாங்கள் சார்ந்த மக்களுக்கு வேண்டிய நல்ல சேவைகளைச் செய்து கொள்ளுங்கள்.

    கல்முனை தமிழ் உபபிரதேசசெயலகமானது கல்முனை தமிழ் பிரதேசசெயலகமாக தரம் உயர்வதனால் ஏன், எந்த அடிப்படையில்; இனமுரண்பாடுகள் வரவேண்டும் என்பதனை இவ்வாறான அறிக்கை விடுபவர்கள் தெளிவாக திறந்த மனதுடன் தெரியப்படுத்தல் வேண்டும். தமிழ் மக்களும, முஸ்லிம்மக்களும் இன்று நிம்மதியாக சந்தோசமாக சகோதரத்துவத்துடன்; எந்தவிதமான விரிசல்களுமில்லை. திறந்தமனதுடன்தான் வாழ்கின்றனர்.

    இந்நிலையில், கல்முனையை பிரித்தால் முரண்பாடு வலுக்கும் என எச்சரிக்கும் அரசியல் வாதிகளின் செய்திகளைப் பார்த்து அதிர்ந்து போனோம். காரணம் இவர்கள் யாரை எச்சரிக்கின்றார்கள்? ஏன் எதற்காக எச்சரிக்கை விடவேண்டும்.
    உண்மையில் தமிழர்கள் எதிர்பார்க்கும் நியாயமான கோரிக்கை என்னவென்றால் ஏற்கனவே உபதமிழ்பிரதேசசெயலகமாக நீண்டகாலமாக தனித்து இயங்கும் கல்முனை தமிழ் உபபிரதேசசெயலகத்தினை தரமுயர்த்தி அதனூடாக அரசசேவையினை விரிவுபடுத்தி மக்கள் துரிதமான சேவையைப் பெறவேண்டுமென்ற நல்ல நோக்கத்திற்காகவே தனித்தமிழ் பிரதேசசெயலகம் என்ற நிர்வாகக் கட்டமைப்பை எதிர்பார்க்கின்றனர்.

    ஆனால், தங்கள் அரசியல் இருப்பைத்தக்க வைக்கவேண்டும் என்ற ஒரேஒரு நோக்கத்திற்காக மட்டுமே ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகள் இத்திட்டத்தினை எதிர்ப்பது போன்று ஒரு நடவடிக்கையினை ஏற்படுத்தி அதனூடாக அவர்கள் சார்ந்த மக்களிடம் செல்வாக்கைப்பெறமுயற்சிக்கின்றனர்.

    எனவே, தமிழ் முஸ்லிம் மக்களைப்பிரிக்கும் சதியில் அரசியல்வாதிகள் ஈடுபடுவதனை இனிமேல் ஏற்றுக் கொள்ள முடியாது. முரண்பாடுகளை உருவாக்கும் அரசியல் வாதிகளை மக்கள் நன்கு இனங்கண்டுள்ளனர். இதனால் அவர்களின் சதிவலையில் சிக்கமாட்டார்கள்.

    அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கரையோர மாவட்டம் கேட்கின்றனர். எந்த தமிழ் கட்சிகளோ அல்லது தமிழ்மக்களோ இதுவிடயமாக எதுவித எதிர்கருத்தும் வெளியிட்டார்களா? இல்லை.

    அதேபோன்று, மட்டக்களப்பு மத்தி தனி முஸ்லிம் பாடசாலைகளை மையப்படுத்தி அமையப்பெற்றுள்ள கல்விவலயம் இனமுரண்பாட்டை தோற்றுவித்துள்ளதா? அல்லது, தமிழ் அரசியல்வாதிகளோ, அமைப்புக்களோ எதிர்கருத்துககளைக் கூறிதடுக்கநினைத்தார்களா? இல்லையே.ஏன் நீங்கள் தமிழ் பிரதேசசெயலகம் ஒன்று உருவாவதை தடைசெய்ய எத்தணிக்கின்றீர்கள்? இதனால் முஸ்லிம்மக்களுக்கு ஏற்படும் தீமைதான் என்ன?

    எனவே, தயவுசெய்து இப்படியான இனவிரோத கருத்துக்களைக் கூறும் அரசியல் தலைவர்களே தமிழ்மக்களின் மனங்களை புண்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு மக்களிற்கு நல்லவை நடக்க தங்களின் ஆதரவை வழங்குங்கள் அதுதான் நல்ல அரசியல்வாதிகளின் நற்குணமாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை தமிழ் உபபிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவதனால் இன முரண்பாடு ஏற்படுமா? எந்த வகையில்; கேள்வி கேட்கின்றார் கி.மா.ச உறுப்பினர் நடராசா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top