• Latest News

    December 14, 2013

    மனைவியை மீட்டுத்தருமாறு இருந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

    முஹமட்;
    கடந்த வியாழக் கிழமை முதல் வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ள தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த அபூவக்கர் முஹமட் றபீக் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அவர் இன்று தனக்கு அதிகாரிகளினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.


    இவருடன் இவரது முன்று பிள்ளைகளான  பாத்திமா முபிசா (வயது-10) தரம்-5இ முகம்மது வசீம் (வயது-8) தரம்- 4இ  முகம்மது ரொசான் (வயது-3 ) ஆகியோரும் உண்ணாவிரத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது

    இதனைத் தொடரந்து இன்று காலை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த இடத்திற்கு குச்சவெளி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.முபாறக்இ பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்இ அரச அதிகாரிகளை சந்தித்து மேற்படி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன்  அவரது மனைவியை மீட்டுத்தருவதற்கு உரிய நடவடிக்கைக்களை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.

    இதனையடுத்தே உண்ணாவிரத போராட்டம்  நிறைவுக்குகொண்டு வரப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மனைவியை மீட்டுத்தருமாறு இருந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top