• Latest News

    December 02, 2013

    தரையில் இறங்கி ஆராயும் சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம் சீனா அனுப்பியது

    சந்திரன் குறித்த ஆய்வுக்காக ஆளில்லா விண்கலத்தை சீனா நேற்று ஏவியது. நிலவு குறித்த சீன ஆய்வுக் குழுவின் துணை கமாண்டர் லீ பென்செங் சேஞ்ச்-3 குறித்து கூறியதாவது: மிக சக்திவாய்ந்த லாங் மார்ச்-3 பி லாஞ்சர் ராக்கெட் மூலம் சேஞ்ச்-3 யை சேர்த்து இதுவரை 25 விண்கலங்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. தற்போது ஏவப்பட்டுள்ள சேஞ்ச்-3 விண்கலத்தில் நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள வசதியாக ‘யூடு’ அல்லது ஜேட் என்றழைக்கப்படும் ரோவர் ஒன்று உள்ளது.
    சந்திரனுக்கு விருப்பமான விலங்காக சீனர்கள் வெள்ளை நிற முயலை கருதுகின்றனர். இதனை குறிக்கும் வகையில் ‘யூடு’ என்று ரோவருக்கு பெயரிட்டுள்ளனர். திட்டமிட்டபடி செயல்பட்டால் இந்த மாத மத்தியில் சேஞ்ச்-3ல் உள்ள யூடு சந்திரனில் இறங்கி ஆய்வுகள் மேற்கொள்ளும். அங்கு மனிதன் வாழ உகந்த சூழ்நிலை உள்ளதா சந்திரனின் தரைப்பகுதியில் உள்ள கனிமங்கள் உள்ளிட்டவை தொடர்பாக ‘யூடு’ ஆய்வு மேற்கொள்ளும். இந்தியாவின் மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக செயல்பட சீனா தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

    விண்வெளி ஆய்வில் சீனா எந்த நாட்டுடனும் போட்டி போடாது. இவ்வாறு லீ கூறினார். இந்தியாவின் சார்பில் ஏவப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் சந்திரனில் நீர் ஆதாரம் கடினமான தரைப்பகுதி உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்தது. அது வெளியிட்ட அடிப்படை தகவல்களை கொண்டு அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் நிலவில் நீர் ஆதாரம் இருப்பது மேலும் உறுதியானது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தரையில் இறங்கி ஆராயும் சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம் சீனா அனுப்பியது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top