• Latest News

    December 16, 2013

    இலங்கையில் இருந்து கம்போடியாவுக்கு கொண்டு சென்ற புத்தர் சிலையின் பாகங்கள் திருட்டு!

    இலங்கை­யிலி­ருந்து கம்போடியாவுக்கு கொண்டு செல்லப் பட்ட கெள­தம புத்­தரின் பாகங்கள் கேசம், பற்கள், எலும்பு­களைக் கொண்ட தங்கப் பேழை­யொன்றே திருடப்பட்டுள்ளதாக கம்போடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் மலைப் பிராந்­திய புனித ஸ்தல­மொன்­றி­லி­ருந்து கள­வா­டப்­பட்ட அநேக சிறிய திரு­வு­ருவ சிலைகள் கடந்த வாரம் உடோங் நகரில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள போதும் புனித சின்ங்களைக்
    கொண்ட பேழை­யைக்­ கண்டுபிடிக்க முடி­ய­வில்லை என கம்போடிய பொலிஸ் பேச்சாளர் கிர்த் சந்­தாரித் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் காணாமல் போன குறித்த பேழையை தேடி வருவதாக தெரிவித்த பொலிசார் திருட்­டுடன் தொடர்­பு­டைய 5 காவ­லர்­களை கைது செய்­துள்­ள­தாக தெரி­வித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் இருந்து கம்போடியாவுக்கு கொண்டு சென்ற புத்தர் சிலையின் பாகங்கள் திருட்டு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top