• Latest News

    December 19, 2013

    வறியமாணவர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் முனாஸ் பாடசாலை உபகரணங்களை வழங்கினார்


    எஸ்.அஷ்ரப்கான்;
    அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும், மாவட்ட சாரணிய உதவி ஆணையாளருமான சமூகசேவையாளர் சாமஸ்ரீ தேஷகீர்த்தி எஸ்.எல்.முனாஸ் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று அட்டாளைச் சேனையில்  இடம்பெற்றது.

    பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸின் இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்..அன்ஸில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

    வறுமானம் குறைந்த சுமார் 200 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

    பல்வேறுபட்ட சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் கடந்த பல வருடங்களாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

    பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி எம்..அன்ஸில் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
      
    வறுமானம் குறைந்த பல குடும்பங்கள் தமது பிள்ளைகளை படிப்பிப்பதற்கு பல கஸ்டங்களை அனுபவித்து வரும் நிலையில் தமது சொந்த நிதியிலிருந்து கற்றல் உபகரணங்களை வழங்க முன்வந்த பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸை  கலந்து கொண்ட அதிதிக்ள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பாராட்டிப் பேசினர்.

    இந்நிகழ்வில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் மற்றும் ஊடகவியலாளர் பைசல் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வறியமாணவர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் முனாஸ் பாடசாலை உபகரணங்களை வழங்கினார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top