மகேஸ்;மன்னார் பெரியகடை கிராமத்தில் தனியார் ஒருவருடைய வீட்டில் அமைக்கப்பட்டு வரும் மதுக்கடையினை உடனடியாக அகற்றக்கோரி அப்பிரதேச மக்கள் இன்று காலை எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த எதிர்ப்புப் பேரணியில் பெரியக்கடை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கமும், பெரிய கடை கிராம மக்களும் பங்கு கொண்டனர்.
எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக மன்னார் நகரசபையை அடைந்தார்கள். அங்கு நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை, உட்பட அக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீர் வடிகாலமைப்பு மற்றும் சமூர்த்தி உதவித்திட்டம் ஆகியவற்றிற்கு இக்கிராம மக்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கையொப்பங்களை தவறான முறையில் பயன்படுத்தி இக்கிராம மக்களும் ஆதரவு வழங்குவதாக கோரி குறித்த மது விற்பனை நிலையத்தினை அமைத்து வருவதாக் குற்றம் சாட்டினார்கள்.
0 comments:
Post a Comment