நிந்தவூர்;
நிந்தவூர் 12ம் பிரிவைச் சேர்ந்த அல்-ஹாபிழ்- மௌலவி முஹம்மது ஆதில் (ஷர்கி); கெய்ரோ அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில்; புலமைப் பரிசில் பெற்று ஷரிஆ கற்கை நெறியை மேற்கொள்வதற்காக எதிர்வரும் (டிசம்பர்)14ம் திகதி கெய்ரோ பயணமாகின்றார்.
நிந்தவூர் 12ம் பிரிவைச் சேர்ந்த அல்ஹாஐ; மௌலவி அப்துல் றஷீது ஆசிரியர், ஓய்வு பெற்ற ஆசிரியை ஹாஜியானி ஆமினா அப்துல் றஷீது தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும் யு.சு.முஹம்மது அறபாத்தின் சகோதரருமாவார்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் இலங்கைக்கான எகிப்திய தூதுவராலயத்தில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் தெரிவு இரண்டாவதாக செய்யப்பட்டார். இந்நேர்முகப் பரீட்சைக்கு 65 மௌலவிமார்கள் கலந்து கொண்டார்கள். இதில் 10பேரைத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அம்பாரை மாவட்டத்தில் இவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:
Post a Comment