• Latest News

    April 15, 2014

    பொது பலசேனாவின செயலாளர் ஞான சேகரருக்கு பதிலளிப்பார்களா? முபாரக் மௌலவி

    கொம்பணித்தெரு பொலிஸ் முன்பாக பொது பலசேனாவின செயலாளர் ஞான சேகரர் மிக மோசமான வார்த்தைகளினால் ஊடகங்கள் முன்பாக மூன்று குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். இவற்றை முஸ்லிம் சமூகம் பெரிதாக அலட்டிக்கொள்ளாவிட்டாலும் சிங்கள மக்கள் இதன் மூலம் தவறாக வழி நடத்தப்படுவார்கள். அதனால் இவற்றுக்காக அவசியம் அரசியல், சமய தலைவர்கள் பதில் தர வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. பொதுபலசேனாவின் மூன்று முக்கிய கற்றச்சாட்டக்கள்:
     
    1.அடுத்தவர்களின் காணிகளில் அத்துமீறி குடியேறுங்கள்,அடுத்தவர் சொத்துக்களை அபகரியுங்கள் என குர்ஆன் சொல்கிறது என்ற குற்றச்சாட்டு. இதற்கு நிச்சயம் உலமா சபை பகிரங்கமாக பதில் தர வேண்டும். உலமா சபை பதில் தராவிட்டால் உலமா கட்சி அதற்குரிய பதிலை தரவேண்டும்.

    2.ரிசாத் பதியுதீன் வில்பத்துவில் முஸ்லிம்களை அத்துமீறி குடியேற்றுகிறார் என்ற குற்றச்சாட்டு. இதற்கு ரிசாத் பகிரங்க ஊடக மாநாட்டை நடத்தி பதில் தரவேண்டும்.

    3.பொதுபலசேனாவின் ஒழுக்கத்தை கண்டிக்க ரஊப் ஹக்கீமுக்கு தகுதியில்லை என்ற குற்றச்சாட்டு. அவர் குமாரியை கெடுத்து அவளை தீயிலிட்டவர் என்பதால்.  இதற்குரிய பதிலை முஸ்லிம் காங்கிரஸ் பகிரங்கமாக தர வேண்டும். அல்லது ஒழுக்கம் கெட்ட தலைவரை நீக்கிவிட்டு இதோ ஒழுக்கம் கெட்ட தலைவரை நாம் நீக்கி விட்டோம், ஒழுக்கமில்லாத ஞான சேகரை நீங்கள் நீக்குங்கள் என பொது பல சேனாவுக்கு சொல்ல வேண்டும். இவை நடக்குமா என்பதுதான் மக்களின் இன்றைய எதிர் பார்ப்பு.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொது பலசேனாவின செயலாளர் ஞான சேகரருக்கு பதிலளிப்பார்களா? முபாரக் மௌலவி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top