• Latest News

    December 16, 2013

    கல்முனை தனியார் பஸ் நிலையத்தினை நவீனமயப்படுத்த மாநகர சபை நடவடிக்கை

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    இரண்டு கோடி ரூபா செலவில் கல்முனை தனியார் பஸ் நிலையத்தில் அமைக்கப்படவுள்ள ஒற்றுமை சதுக்க நிர்மாணப் பணிகளுக்காக அங்குள்ள தற்காலிக கட்டிடங்களை உடைத்து அகற்றும் வேலைகள் திங்கட்கிழமை காலை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
    இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ், முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறுக் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
    இதன்போது கல்முனை தனியார் பஸ் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் தற்காலிகமாக செயற்பட்டு வந்த கடைகள் யாவும் அகற்றப்பட்டன
    இக்கடைகளின் நடத்துனர்களுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள ஒற்றுமை சதுக்க கட்டிடத் தொகுதியில் மாற்றுக் கடைகள் வழங்கப்படும் குறித்த வர்த்தகர்களிடம் சென்ற வாரம் முதல்வர் உறுதியளித்திருந்தார்.
    இதன் பேரில் அவ்வர்த்தகர்களின் இணக்கப்பாட்டுடன் இக்கடைகள் இன்று திங்கட்கிழமை அகற்றப்பட்டுள்ளன.
    கல்முனை நகரில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற தனியார் பஸ் நிலையத்தை ஒற்றுமை சதுக்கம் எனும் பெயரில் சகல வசதிகளும் கொண்டதாக தவீனமயப்படுத்தி அதனை இரவு நேரத்திலும் இயங்கச் செய்யும் வகையில் வர்த்தக மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் மேம்படுத்தும் நோக்கில் மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு கொரிய நாட்டு கொய்கா நிறுவனம் உதவ முன்வந்துள்ளது.
    இதற்காக கொய்கா திட்டத்தின் கீழ் இரண்டு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு கொய்காவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பார்க் சூக் இணக்கம் தெரிவித்துள்ளார்.
    ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் சகிதம் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கொய்காவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியை கடந்த மாதம் கொழும்பிலுள்ள கொரிய நாட்டு தூதரகத்தில் அமைந்துள்ள கொய்கா தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போதே முதல்வரின் இத்திட்டத்திற்காக இரண்டு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு கொய்காவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி இணக்கம் தெரிவித்திருந்தார்.
    அதன் பேரில் முதற்கட்ட நிதியாக இருபது லட்சம் ரூபாவுக்கான காசோலை அண்மையில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீதினால் முதல்வரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை தனியார் பஸ் நிலையத்தினை நவீனமயப்படுத்த மாநகர சபை நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top