கென்யா நாட்டுக்கு நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று நாடு திரும்புகிறார். இன்று முற்பகல் நாடு திரும்பும் ஜனாதிபதி விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கென்யா அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைய கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், சுற்றுலா உட்பட பல துறைகள் தொடர்பிலான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.கென்யா அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைய கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோரும் கென்யா சென்றிருந்தனர்.
ஜனாதிபதி விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதுடன், இந்த கூட்டத்தின் போது பிரதமர் தி.மு.ஜயரட்னவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், உள்ளுராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த உள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று திங்கட்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் போயா தினத்தன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது இதுவே முதல்முறையாகும்.
அத்துடன், ஆளும் கட்சியின் அதிகாரத்தின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் 18ம் திகதி புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது

0 comments:
Post a Comment