• Latest News

    December 04, 2013

    இலங்கை ஊழலில் முன்னேற்றம் !

    அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் காரணமாக சர்வதேச ஊழல் சுட்டெண்னில் தொடர்ந்தும் இலங்கை பின்னோக்கிச் சென்றுள்ளதாக ட்ரான்ஸ்பெரன்சி இன்டெர்நெஷனல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    கடந்த வருடம் 40 புள்ளிகளை   பெற்று 79 ஆவது இடத்திலிருந்த இலங்கை இந்த வருடம் 177 நாடுகளுள் 37 புள்ளிகளை   பெற்று 91 ஆவது இடத்திற்கு பின்னோக்கிச் சென்றுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ட்ரான்ஸ்பெரன்சி இன்டெர்நெஷனல் நிறுவனத்தால் வருடாந்தம் வெளியிடப்படும் சர்வதேச ஊழல் சுட்டெண் ஊடாக உலக நாடுகளின் அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் தொடர்பில் கவனம்  செலுத்தப்படுகின்றது.

    டென்மார்க் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் சமமான புள்ளிகளை 91 பெற்று ஊழல் குறைந்த நாடுகளாக கணிக்கப்பட்டுள்ளன.

    சர்வதேச ஊழல் சுட்டெண்ணில் ஆப்கானிஸ்தான், வட கொரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் 08 புள்ளிகளை  இறுதி இடங்களை பிடித்துள்ளன.
    தெற்காசிய நாடுகளுள் பூட்டானை விட இலங்கை பின்னிலையிலுள்ளதுடன் இந்தியா மற்றும் பாகிஸ்தான ஆகிய நாடுகளை விட இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை ஊழலில் முன்னேற்றம் ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top