• Latest News

    September 23, 2014

    அரசாங்கத்தில் இருந்துகொண்டு முஸ்லிம்களின் வாக்குகளை பெறமுடியாது என்பதை உணர்ந்து விட்டோம்

    நடை­பெற்று முடிந்­துள்ள ஊவா மாகாண சபைத் தேர்­தலில் அர­சாங்கம் முன்­னிலை பெற்­றுள்ள போதிலும் எதிர்க்­கட்­சி­க­ளுக்கே சாத­க­மான தேர்­த­லாக அமைந்­துள்­ளது. இந்த தேர்தல் அர­சாங்­கத்தை பல­வீனப் படுத்­தி­யுள்­ளது என்­பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என தெரி­விக்கும் அர­சாங்க பங்­காளிக் கட்­சி­யான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அர­சாங்­கத்தின் மீதான வெறுப்­பினை முஸ்லிம் மக்கள் நேர­டி­யாக வெளிப்­ப­டுத்தி விட்­டனர். அர­சாங்­கத்தில் இருந்து கொண்டு முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை பெற முடி­யாது என்­பதை உணர்ந்து விட்டோம் எனவும் தெரி­வித்­துள்­ளது.
     
    நடை­பெற்று முடிந்­துள்ள ஊவா மாகாண சபைத் தேர்­தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்­சிகள் இணைந்து போட்­டி­யிட்­டி­ருந்த போதிலும் ஒரு ஆச­னத்­தை­யேனும்
    பெற்­றுக்­கொள்ள முடி­யாது போயுள்­ளது. இந்­நிலை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிடம் வின­விய போது அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் எம்.சி. ஹசன் அலி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

    ஊவா மாகாண சபைத்­தேர்­தலில் நாம் எதிர்­பார்த்த அளவில் தேர்தல் பெறு­பே­றுகள் சாத­க­மா­ன­தாக அமை­ய­வில்லை. அர­சாங்­கத்­திற்கும் இம்­முறை தேர்தல் சற்று பின்­ன­டை­வி­னையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. உண்­மை­யி­லேயே ஊவா மாகாண முஸ்லிம் மக்­களின் நம்­பிக்­கையில் நாம் அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­சுடன் இணைந்து நு.ஆ. கட்­சியில் போட்­டி­யிட்­டி­ருந்த போதிலும் முஸ்லிம் மக்கள் எம்மை ஆத­ரிக்­க­வில்லை என்­பதே உண்மை. அத்­தோடு முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னையே பலப்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும் அர­சாங்­கத்தில் அங்கம் வகித்­துக்­கொண்டு நாம் எமது கொள்­கை­களை மக்கள் மத்­தியில் கொண்டு சென்­றாலும் மக்கள் எம்மை ஏற்­றுக்­கொள்ள தயா­ரா­க­வில்லை. அத்­தோடு அர­சாங்­கத்தின் மீதான வெறுப்­பினை முஸ்லிம் மக்கள் நேர­டி­யா­கவே வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

    அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஊவா தேர்­தலில் கள­மி­றங்கும் எண்ணம் இருக்­க­வில்லை. எனினும் மக்­களின் வேண்­டு­கோ­ளுக்கும் ஒரு சிலரின் கோரிக்­கை­க­ளுக்கும் அமை­ய­வுமே நாம் இரட்டை இலை சின்­னத்தில் போட்­டி­யிட்டோம். இது எமது பரீட்­சார்த்த நட­வ­டிக்­கை­யா­கவே அமைந்­தி­ருந்­தது. எனினும் இதில் மக்கள் எங்­களை நிரா­க­ரித்­துள்­ளனர்.

    மேலும் பிர­தான எதிர்க்­கட்­சி­க­ளுக்கு நல்­ல­தொரு சந்­தர்ப்­ப­மா­கவும் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலை தீர்­மா­னிக்கும் கட்­சி­யாக உரு­வா­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளது. எனினும் எதிர்க்­கட்­சி­க­ளி­டையே ஒற்­றுமை இன்­மையும் முரண்­பா­டு­க­ளுமே அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்தி வரு­கின்­றன. அத்­தோடு அர­சாங்கம் கடந்த காலங்­களில் சிறு­பான்மை மக்கள் விட­யத்தில் தவ­றி­ழைத்­துள்­ளமை இத் தேர்­தலில் அர­சாங்கம் சிறு­பான்மை சமூ­கத்தின் எதிர்ப்­பினை சம்­பா­திக்க கார­ண­மாக அமைந்­துள்­ளது.

    எனினும் அர­சாங்­கத்தின் வெற்றி இன்னமும் முன்னோக்கியுள்ளமையானது அரசாங்கத்தை பலப்படுத்தியுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் அரசியல் மாற்றங்கள் சமூகங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் செய்யுமாயின் மூவின சமூகத்தின் ஆதரவுடனும் பலமானதொரு ஆட்சியை அமைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.-வீரகேசரி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்கத்தில் இருந்துகொண்டு முஸ்லிம்களின் வாக்குகளை பெறமுடியாது என்பதை உணர்ந்து விட்டோம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top