வட கொரியாவில் மிகவும் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளில்
ஒருவரும், நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அவர்களின் மாமாவுமான ஜங் சாங்
தேக் பதவியிலிருக்கு விலக்கப்பட்டுள்ளதாக தென் கொரியச் செய்திகள்
கூறுகின்றன.
தென் கொரியாவிலிருந்து வரும் அந்தச்
செய்திகளின்படி ஜங் சாங் தேக் வட கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின்
துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அந்த ஆணையம் வட கொரியாவின் அரச நிர்வாகத்தில் மிகவும் முக்கியமான ஒன்று.
அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள தகவலை தென்
கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்டார். தமது நாட்டின் உளவு
அமைப்பு அளித்த ஒரு விளக்கத்தை அடுத்தே இத்தகவலை அவர் தெரிவித்தார்.
ஜங் சாங் தேக் பதவி நீக்கப்பட்டுள்ளது
உண்மையானால், மிகவும் இரகசியமாக ஆட்சி நடக்கும் கம்யூனிஸ நாடான வட
கொரியாவின் மேல் மட்டத்தில் ஒரு பெரிய நிர்வாக மாற்றத்தை அது குறிக்கும்.
0 comments:
Post a Comment