பாணின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்தமாதம் முதல் கோதுமை மாவிற்கு வரி விதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதனால்தான் பாணின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதென்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன குறிப்பிட்டார்.

கோதுமை மாவுக்கு வரி விதிக்கப்படின் அதனுடன் தொடர்புடைய துறையினர் பெரிதும் பாதிக்கப்படலாம் என்பதால் அரசாங்கம் அதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.
நாட்டில் சுமார் 05 இலட்சம் பேர் பேக்கரி உற்பத்தித் துறையை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன சுட்டிக்காட்டினார்.

0 comments:
Post a Comment