எஸ்.அஷ்ரப்கான்;
'திதுலன' ஒளிரும் கல்முனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்திற்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர். என். ஆரிப் தலைமையில் மாவட்ட வைத்தியசாலையில் எதிர்வரும் 24.12.2013 செவ்வாய்கிழமை காலை 10.10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனைத்தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் சிராஸ் மீராசாஹிப், கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெவ்வை ஆகியோரும், கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் வை.எம்.ஹனீபா, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஸஹீலா இஸ்ஸதீன் ஆகியோருடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட மேலும் பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளதாக சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் றியாத் ஏ.மஜீட் தெரிவித்தார்.'திதுலன' ஒளிரும் கல்முனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்திற்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர். என். ஆரிப் தலைமையில் மாவட்ட வைத்தியசாலையில் எதிர்வரும் 24.12.2013 செவ்வாய்கிழமை காலை 10.10 மணிக்கு நடைபெறவுள்ளது.
0 comments:
Post a Comment