• Latest News

    December 04, 2013

    அம்பாரையில் தொடர்ந்தும் மழை; மாவடிப்பள்ளி பாலத்தின் மேலால் வெள்ள நீர் பாய்ந்து செல்லுகின்றது

    அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சம்மாந்துறை மாவடிப்பள்ளி வீதியூடனான போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    மழை பெய்துவரும் நிலையில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அந்தப் பகுதியினூடான போக்குவரத்தில் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக சம்மாந்துறை  பொலிஸார் குறிப்பிட்டனர்.

    மழையுடன் கூடிய வானிலை தொடருமானால் மாவடிப்பள்ளியூடான போக்குவரத்து முற்றாக தடைப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது
    தற்போது சிறியரக வாகனங்கள் குறித்த வீதியூடாக  போக்குவரத்து செய்ய முடியாத நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

    அத்தோடு, அம்பாரை மாவட்டத்தில் தொடர்ந்தும் கடல் கொந்தளிப்பாகவே இருக்கின்றது. ,தனால், மீன் பிடித் தொழிலாளர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    இதே வேளை, அம்பாரை மாவட்டத்தில் கடல் மீன்களுக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றது. ,தனால், கடல் மீன்கள் மன்னார், கற்பிட்டி, மாத்தறை போன்ற தூர இடங்களில் இருந்து அம்பாரை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுவதாக மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றார்கள். மீன்களுக்கான விலையும் அதிகரித்துள்ளன.

    இதே வேளை, நிந்தவூர், காரைதிவு, திருக்கோயில், ஒலுவில் போன்ற பிரதேசங்களில் உள்ள வயற்காணிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.

    இதே வேளை, காலி தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக  யாழ்ப்பாணம் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி முஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாரையில் தொடர்ந்தும் மழை; மாவடிப்பள்ளி பாலத்தின் மேலால் வெள்ள நீர் பாய்ந்து செல்லுகின்றது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top